பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

ஈரோடு மாவட்ட வரலாறு


நீக்கிய பால்பவுடர், நறுமணப்பால், பால்கோவா, ஐஸ்கிரீம், பேரீச்சம்பழம் கோவாவும் தயாரித்து விற்கப்படுகிறது.

நீலகிரீஸ் நிறுவனத்தினரும் பிற நிறுவனத்தினரும் தனியார் பலரும் பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் தயாரித்து உள்ளூரிலும் வெளியூரிலும் விற்கின்றனர். ஊத்துக்குளி பால் பொருள்கள் மிகப்புகழ் வாய்ந்தவை.

முட்டை

நாமக்கல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி வளர்ப்பில் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்குகிறது. ஏறத்தாழ 45 இலட்சம் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. முட்டைகளும் கறிக்கோழிகளும் வெளியூருக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. எஸ்கேஎம் முட்டைப்பவுடர் நிறுவனம் ஒரு நாளைக்கு 12 லட்சம் முட்டைகளை உடைத்து மஞ்சள் கருப்புவுடர், வெள்ளைக்கருப்பவுடர் மற்றும் இரண்டும் கலந்த பவுடர் ஆகியவற்றை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. எஸ்.எல்.டி; பி&சி; சௌத் இந்தியா போன்ற பல கோழிப் பண்ணை நிறுவனங்களும் முட்டை மற்றும் கோழி வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

சிலர் வாத்து, ஈமுகோழி ஆகியவைகளையும் வளர்த்து முட்டை வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உணவுசார் பொருட்கள்

சக்தி மசாலா நிறுவனம் 50க்கும் மேற்பட்ட மசாலா பொடிகளையும் 12 வகையான ஊறுகாய்களையும் தேன், மாவு வகைகள் அப்பளம், வற்றல் முதலியவற்றைத் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்புகிறது. மில்கா, நீலகிரீஸ், அமுதம், கண்ணான், எஸ்ஸார் போன்ற பல நிறுவனங்கள் பிஸ்கட், ரொட்டி வகைகள் பலவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது. லாலா மசாலா நிறுவனத்தினர் சென்னையிலிருந்து தங்கள் தொழிற்சாலையை ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர்.