பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

225


தபால் - தந்தி வசதி

இன்றைய தபால் அலுவலக முறையை ஒத்த அமைப்பை ஷெர்ஷா உருவாக்கினார் என்பர். மைசூர் உடையார் சிக்கதேவராசா (1673-1704) '18 சாவடிகள்' என்ற பெயரில் 18 இலாக்காக்களை ஏற்படுத்தினார். அதில் 'நிருப சாவடி' என்பது தபால் துறையாகும். அரசு தபாலுடன் தனியார் தபால்களையும் அது எடுத்துச் சென்றது. தபால்காரர் குற்றப் புலனாய்வுப் பணிகளையும் மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் தபால் பெறுதல் - வழங்குதல் பணியை மட்டும் செய்யும் தபால் நிலையங்கள் 393; தபாலும் - தந்தியும் அனுப்பும் வசதியுடைய தபால் நிலையங்கள் 228; வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகள் 3005 ஆகும்.

தொலைபேசி இணைப்பகங்கள் 105; பொது அழைப்புத் தொலைபேசிகள் 3564: பயன்பாட்டில் உள்ள தொலைபேசிகள் 170529 ஆகும். 'இன்டர்நெட்' வசதியும் பரவலாக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலைக்கும் இருந்த இடத்திலிருந்தே தொடர்பு கொள்ளலாம். 'செல்போன்' எனப்படும். அலைபேசி பல இலட்சக்கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தனிப்பட்ட பல நிறுவனங்களின் 'தூதஞ்சல்' எனப்படும் கூரியர் தபால் பணியும் சிறப்புடன் இயங்கி வருகிறது. லாரி போக்குவரத்தில் தமிழகத்தில் மிக முக்கியமான ஊார்களில் ஈரோடும் ஒன்று.