பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

25


ஆனால், இவற்றை அண்மையில் சிறப்பாக ஆய்வு செய்த டாக்டர் நாசிம்மையா அவர்கள் இவை "புதிய கற்காலக் கருவிகளின் முன் காலம்" என்று கூறி அவற்றின் காலம் கி.மு.3500 என்று நிர்ணயம் செய்துள்ளார். இவை கிடைத்த பகுதியில் அக்காலத்திற்குரிய பானை ஓட்டுத் துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை புதிய கற்காலத்துக்கு முன் பானைகளைப் பயன்படுத்திய மக்கள் உருவாக்கியவை.

நரசிம்மையா புதிய கற்காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளார். முதல் காலகட்டம் கி.மு. 2800 - 2200; இரண்டாம் கால கட்டம் கி.மு.2200-1800; மூன்றாம் காலகட்டம் கி.மு.1800-கி.மு.500 ஆகும். ஆனால் பர்கூர்ப் புதிய கற்கால ஆயுதங்கள் முதல் காலகட்டத்திற்கு முந்திய காலம் கி.மு.3500 என்று அவர் நிர்ணயம் செய்துள்ளார். எனவே பர்கூர் கருவிகளைப் பழைய கற்காலக் கருவிகளோடு ஒப்பிடலாம்.

பர்கூர் மக்கள் மலைத் தளங்களில் படிக்கட்டு வயல்களை உண்டாக்கி வேளாண்மை செய்துள்ளனர். இக்கருவிகளைக் கிழங்குகள், காய்கறிகளைத் துண்டாக்க அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தொல்லியலார் கருத்தாகும். அல்லது வேட்டையில் கிடைத்த பறவைகள் மற்றும் சிறு விலங்குகளின் தோலை உரிக்கவும் இறைச்சியை வெட்டவும் இக்கருவிகள் பயன்பட்டிருக்கலாம்.

இ) பெருங்கற்காலம்

(கி.மு. 1000 - கி.பி..100)

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 1800-1810 ஆண்டுகளில் நில அளவை அலுவலர் மெக்கன்சியின் உதவியாளர்கள் இம்மாவட்டத்தில் உள்ள பெருங்கற்காலப் பண்பாட்டு. இடங்களைப் "பாண்டுக் குழிகள்" என்றும், ஈமத்தாழிகளை "மூத்தாந்தாழிகள்" என்றும்அறிவித்துள்ளனர்.

பழைய, புதிய கற்காலத்திற்குப் பிறகு பெருங்கற்காலப் பண்பாடு வருகிறது. அதுவே தமிழ்நாட்டின் சங்ககாலம் ஆகும். பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், இடுகாடுகள், ஈமக்குழிகள் நூற்றுக்கணக்கில்