பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஊளைச்சதை போக்கும் உடற்பயிற்சிகள்


உடலில் உண்டாகும் உபயோகமற்ற ஊளைச்சதைகளை உடற்பயிற்சியின் மூலமாகவே போக்கிட முடியும்.

உடற்பயிற்சிகள், மிகையாக உள்ள கலோரிகளை எரித்து விடுகின்றன. கொழுப்பினை உண்டாக்கும் மூலங்களையும் குறைத்து விடுகின்றன.

தொளதொளவென்றிருக்கும் தசைகளுக்கு சக்தி யூட்டுகின்றன. கடினத்தன்மையளித்து, கட்டு மஸ்தான தேகமாக மாற்றுகின்றன. அத்துடன், உடலுக்கு ஒரு தோரணையையும் எடுப்பான தோற்றத்தையும் அளிக்கின்றன.

உடற்பயிற்சிகள் மட்டுமே ஊளைச்சதைகளை அறவே ஒழித்து விடாது என்பதையும், உண்ணும் உணவின் அளவையும் தேவையான அளவு குறைத்து உண்ண வேண்டும் என்பதையும் மறந்திடக் கூடாது.

உடற்பயிற்சி என்பது ஊளைச்சதைகளைப் போக்க உதவுகிறது என்பது தான் உண்மை. உணவின் அளவு