பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


யிலேயே இது உருப்பெற்றது. நீதியின் இறுதி வெற்றியிலிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத்தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இந்தத் திட்டத்தைத் துவக்குவதற்காகத் தைரியத்தையும், விவேகத்தையும் கொடுத்திருக்க முடியாது. புயலால் கொந்தளிக்கும் கடலிலே அபாயம் நிறைந்த ஒரு பிரயாணத்தை மேற்கொள்வது போலிருந்தது அது. கப்பல் சிதைவதைத் தவிர வேறு வழியேதும் இல்லாத நிலை. ஆம், பொங்கும் அலைகளையும் கடல் நீரின் பலமான போக்கையும், தைரியத்துடன் எதிர்த்து நின்று, உதவி தேவைப்படுவோருக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் கொடுத்து இந்தக் கப்பல் இருபத்திரண்டு ஆண்டுகளாகக் கடலிலே பிரயாணம் செய்து வருகிறது. இந்த ஸ்தாபனத்திற்குப் பாதகமான அம்சங்களையும், அதைச் சூழ்ந்து இருக்கும் அக்கறையின்மையையும் கருத்தில் கொண்டுதான் இதை மதிப்பிட வேண்டும். இப்படி செய்தால்தான் சரியாக மதிப்பிட முடியும்.

தாக்குவதற்கோ, தாக்குதல்களை எதிர்ப்பதற்கோ எப்போதுமே நாடுகள் ஆயத்தமாக இருக்கக் கூடிய நிலையிலே தூதுவர்களுடன் உளவாளிகளையும் அனுப்பத் தயாராக இருக்கும் நிலையிலே எல்லைகளைத் தகர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தலைநகரங்களில் ஆடம்பரமான வரவேற்புக்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் நிலையிலும், உலகம் இன்று இருக்கிறது. இந்த நிலையிலும் அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியக் கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. சம கௌரவத்தோடு பறக்கின்றன. பல்வேறு நாடுகளாக இருப்பினும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவை, தனித்தனியாக வாழ்கின்ற போதிலும் பொதுவான குறிக்கோளைக் கொண்டவை, பொதுநலனுக்காகத் திரட்டுவதற்கென வளமும் வலிமையும் கொண்டவை. மனிதனை மேலும் மகிழ்ச்சியுள்ள நிறைவாழ்வு வாழச் செய்யும் அச்சத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும், நோயிலிருந்தும், அறியாமையிலிருந்தும், வன்முறையிலிருந்தும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்தும் விடு-