பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


போதிய ஆதார வசதிகள் படைத்திராத நாடுகளுக்கு உதவி புரிந்து வழிகாட்டுவதற்காகவும் அவற்றை வளப்படுத்துவதற்காகவும் அண்டை நாடுகளும் சரி; எங்கே இருக்கும் நாடுகளும் சரி, எல்லா வாழ்க்கைத் துறைகளையும் சேர்ந்த நியுணர் குழுக்களை அனுப்பி வைக்கின்றன. எங்கெங்கே தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் மனிதனின் துன்பத்தை, அது உடலை வாட்டும் துன்பமாக இருந்தாலும் சரி, மனத்தில் ஏற்படும் இன்னலாக இருந்தாலும் சரி, அதை அகற்றுவதற்கும் குறைப்பதற்கும் ஒழிப்பதற்கும் கைகொடுத்து உதவத் தயாராயிருக்கும். ஏழை மக்களுக்கு இயற்கை அன்னை அதன் செல்வங்களைக் கொடுக்கும்படிச் செய்வதற்கும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு வீரத்தைப் புகட்டுவதற்கும், நலிந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கும் எல்லாருக்கும் மனிதாபிமானத்தையும் காண்பிப்பதற்குத் தயாராயிருக்கும் ஐக்கிய நாடுகள் குழுவைக் காணலாம்.

ஐ.நா. ஸ்தாபனத்தின் சமாதானங்காணும் முயற்சிகளில் ஆர்வமில்லாதவர்கள் கூட, மேம்பாடு குன்றிய, மேம்பாடடைந்து வரும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அது புரிந்து வருகிற பணியைப் பாராட்டத்தான் செய்கிறார்கள்.

சில சமயங்களில் ஐ. நா. வின் சாதனைகள் விஷயத்தில் தமக்குப் பூரண திருப்தி ஏற்படாவிட்டால்கூட ஐ. நா. வுக்கு அதன் எல்லா முயற்சிகளிலும் நாம் தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறோம். ஏனென்றால் ஜவஹர்லால் நேரு கூறியிருப்பதுபோல, ஐ. நா. ஸ்தாபனம் பலவீனமடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம் பலவீனமாயிருப்பதுதான், நாடுகள் பலவீனமாயிருப்பதுதான், அவை கொள்கை பலமற்றவையாய் இருப்பதுதான், அவை நேர்மையற்றவையாய் இருப்பதுதான் என்பதை நாம் உணருகிறோம். நமது மன உறுதியும் பலமும் மட்டுமே