பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


காய்கள், ஓடப்பர்--ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப்பணமே, கோட்டையாய், கொடிமரமாய், பாதையாய், பகட்டுகளாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையும் கூடங்களாகத் திகழ்கின்றன.

வியர்வை பணமாகிறது--வரியாகப் பெறப்படுகிறது; அதனைக்கொண்டே பல்கலைக் கழகம் முதல் தொடக்கப் பள்ளிவரை கட்டப்பட்டுள்ளன.

எத்தகைய தியாகக் கோட்டமாக இந்நாடு இந்தாளிலுள்ளது என்பதனை, எத்துணை ஏழைமைக்கிடையில் இந்நாட்டு மக்கள் தாம் பெற்றிராத பெரிய வாய்ப்பினை நமக்கு அளிக்கின்றார் என்பதனை மாணவர் உணர்ந்திடின்--அவர் உணர்வர். அவர்களுடைய பொறுப்புணர்ச்சி மிகுந்திடும். ஏற்புடைய செயலில் ஈடுபடுவதே இத்தனை தந்திடும் ஏழையர்க்கு நாம் காட்டும் நன்றியறிதல் என்றறிவர்.'

அது மாணவர் உலகில் புதியதோர் திருப்பத்தைத் தந்திடும்.

கனவு காண்கின்றேனா? இல்லை! மாணவர் நினைப்பு அறிந்து கூறுகின்றேன். எதிர்காலம் அவர்களுடையது. அதனை இருளகற்றதாக்கிவிடுவது அவர்கள் பொறுப்பு. அதற்கான ஆற்றல் மிக்கோர் அவர்கள். இஃது எனது நம்பிக்கை.

ஒவ்வொரு நாட்டிலும், சிறப்பு மிக்க கட்டங்களில் மாணவர்கள் முன்னணியில் நின்று பணி புரிந்தனர் என்பதனை வரலாறு காட்டுகின்றது.

இன்று மாணவர்களாக நீவிர் இருந்திடும் காலம் நமது நாட்டின் புதிய வரலாறு எழுதப்படும் காலமாகும்.

கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி தரக்கூடிய லட்சியங்கள் நம்முன் நிற்கின்றன.