பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


யார் எந்த நாட்டைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

தமிழ் மொழியின் மாண்பைப்பற்றி நாம். மட்டுமல்ல அனைத்து நாட்டு அறிஞர்களும் இங்கு வந்து எடுத்துரைத்திருக்கிறார்கள்.

எத்தகைய ஏற்றமிகு தமிழ் மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற பெருமித உணர்ச்சி நமக்கு இயற்கையாக வரத்தான் செய்யும்.

அந்த மொழியின் ஏற்றத்திற்கு ஏற்ற அளவில் நாம் ஏற்றம் பெற்றிருக்கிறோமா என்பதுதான். ஐயப்பாடே தவிர அந்த மொழியினுடைய ஏற்றம் குறித்து ஐயப்பாடுகிடையாது.

தமிழிலுள்ள காப்பியங்களும் செய்யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் உருவத்திலேயும் நாடக வடிவத்திலேயும் கட்டுரை வடிவத்திலேயும் பல நூல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் தம்பி கருணாநிதி சிலப்பதிகாரத்தை நாடக உருவில் தந்திருக்கிறார். தமிழ் கற்ற அனைவரும் இதனைப் பாராட்டுவார்கள். தம்பி கருணாநிதியின் சிறந்த தமிழ் நடை அனைவரும் உணர்ந்தது.

அவர், சில விஷயங்களைப் பற்றியும்--சில போக்கைக் கண்டித்தும் எழுதுகிற தமிழாக இருந்தால்கூட படிக்கும் போது--கண்டிக்கப்பட்டவர்கள் கூட அதைப்படிக்கிறபோது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டல்லவா எழுதியிருக்கிறார் என்று கருதிக்கொண்டிருப்பார்களே தவிர அவரது தமிழ் நடையிலே குற்றம் கண்டிருக்க மாட்டார்கள்--அவரது நடையில் இலக்கிய