பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


னார். எதிர்கால அரசியல் எப்படி உருவெடுக்கும் என்பதை அப்போதே அதனை உணர்ந்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல! இந்தி புகுத்தப்பட்ட நேரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சென்னையிலுள்ள தங்கச்சாலையிலிருந்து ஐலண்டு மைதானம் வரை தமிழ்க் கொடியைத் தோளில் சுமந்து கொண்டு நடந்தார்.

இந்தத் தமிழ் இயக்கம் படிப்படியாக வளர்ந்து நாட்டை ஆள்கிற கட்சியாக வளர்ந்திருக்கிறது.

அன்று கொடி தூக்கியவர் என்ற முறையில் இப்போது பங்கு கேட்காத பண்பை--பெருந்தன்மையை நான் நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தமிழ் ஆர்வம்--இந்திக்கு எதிர்ப்பு--மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் ஆகியவற்றை அவரது புதிய நண்பர்கள் எதிர்பார்த்தார்கள்; பழைய நண்பர்கள் பயந்தார்கள். ஆனால் அந்தக் கொள்கைகளை அவர் கைவிடவில்லை.

இதைப்பற்றி ஒருமுறை காங்கிரஸ் அசைச்சர் என்னிடம் "அவரை எங்கள் கட்சிக்கு அனுப்பினீர்களே தவிர--உங்கள் கொள்கைகளுடன்தான் அனுப்பினீர்கள்” என்று கூறினார்.

ஜனநாயகத்தில்தான் இப்படிப்பட்ட கருத்து வேற்றுமை. இருந்தாலும், ஒத்துப்போகும் பண்பு இருக்கும். எல்லோரும் ஒரே கருத்துடன் இருப்பதல்ல சமத்துவம்.

ஒரே செடியில் பூத்தாலும் மலர்கள் அளவில் பெரியதும் சிறியதுமாகத்தான் இருக்கும்.