பக்கம்:உயிரில் கலந்தது.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20

லட்சியங்களில் வெற்றி பெருவிட்டாலும், மறு பிறப்பில் நிச்சயம் வெற்றி பெற்றே தீருவார்கள் என்றும், இந்த ஐதீகத்தின் அடிப்படையிலேயே விட்டகுறை-தொட்டகுறை தத்துவமே உருவாகி வழங்கி வருகிறதென்றும் சொன்னசீர்கள் ஒருநாள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை யானல், திருமணங்களை நிச்சயப்படுத்த சொர்க் கத்தை ஏன் நிர்ணயிக்க வேண்டும்? கனவு, காதல், வாழ்க்கை எல்லாமே சொப்பனமாகத்தான் தோன்றுகிறது. உங்கள் இனிய நினைவு ஒன்றுடனே நான் உங்களே விட்டு விடை பெறப் போகிறேன்! என்கனவை வாழவைக்க நான் மறு பிறவி எடுத்து உங்களைக் கட்டாயம் அடைந்தே தீருவேன். ஏனென் ருல், சாவை அனைப்பவர்களின் இறுதி ஆசைகள் நசிவதில்லையல்லவா?

“என்கதை முடியட்டும். ஆணுல் என் சகோதரி யின் கதையைத் தொடங்குவதற்குக் கருணை காட் டுங்கள், உங்கள் அன்பின் நெஞ்சில் தவசீலிக்கு நிழல் தந்து போற்றுங்கள். அப்போதுதான் என் ஆவி ஆறு தலடையும். அப்போதுதானே நான் உங்களுக்காக நிம்மதியுடன் தவம் செய்யக்கூடும்? -

. வாணி.” “ஐயோ, வாணி’ என்று ஓடி, வாணியின் பாத நிழலில் நெடுமரம் சாய்ந்த பாவனையாகச் சாய்ந்தார் ஞானசீலன். *உன் உள்ளம் தொட்ட நான் உன் உடலையும் தொட்டு அதன் மூலமாக உன் மீதுள்ள என் உரிமையினே ஸ்தாபிதம் செய்து கொள்ளவே உன்னை பலவந்தப் படுத்தி அணைய முனைந்தேன். தான் பாவி தேவலோகத்துப்பாரிஜாதம் நீ உன்னை நுகர எனக்கு அருகதையில்லை என்ன மன்னித்து விடு வாணி உன் விருப்பப்படியே தவசீலியைக் கைத்தலம் பற்றச் சம்மதிக்கி றேன். ஆண்டவன் மேல் ஆணை இது’ என்று முடித்தார். ஞானசீலன். சிரிப்பே வடிவமாகி நின்ற தவசீலியின் அழகு