பக்கம்:உயிரில் கலந்தது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


கிறார்களே, இத்தனை வருஷமாக அவர் பேசாத புதுப் பேச். சாக என்னதான் பேகியிருக்கிறார் என்று யாராவது சிந்திக் கிரு.ர்களா? தலைவன் வேண்டியதுதான் ஒரு கட்சிக்கு. அதைப் போலவே, தலைவனுக்குப் பக்தி செலுத்தக்கூடிய தொண்டர் களும் வேண்டியதுதான். ஆனல் தலைவன் கண்மூடியாகவோ அல்லது, தலைவனைப் பின்பற்றும் அடியவர்கள் கண்மூடிப் பக் தர்களாகவோ இருக்கலாகாது. அரசியல் என்பது சொந்த வாழ்வின் பிரச்சினையல்ல; பொது வாழ்வின் சங்கிலியுடன் பின்னிப் பிணைந்திட்ட ஒரு தளை. இவர்களுக்குக் கழகம் ஒரு கத்துமேடையாகப் பயன்படும் ரகசியத்தை பொதுஜனங்கள் எப்போதுதான் தெள்ளத் தெளிய உணரப்போகிறார்களோ??

ஒரு காலத்தில் கல்லூரி வாழ்வின்போது, தான் இருந்த கோலத்தை-கோலவெறியை-எண்ணினர்; வெட்கம் சூழ்ந் தது. தவறு இழைத்ததைச் சுட்டிய மனவளத்தின் தீர்க்க. தரிசனப் புத்தியால் விளைந்த வெட்கம்.

அப்பொழுது இருந்த மனநிலையில் நடந்த சம்பவம் های ژگیه

ஞானசீலனுக்குக் கல்லூரியில் அடியெடுத்தவுடனே, பொறுப்பற்ற சில மாணவர்களைப் போன்றே அவருக்கும் ’கறுப்பில் ஒரு நாட்டம் உண்டாகி விட்டது, இனம் பிரித்து, இனவெறி பிடித்துப் பேசிக் காலங்கடத்தி வந்த பேச்சாளர் களின் வாய்ப்பந்தல் பேச்சுக்களை எழுத்தின் மூலமாகவும் செவி வழியாகவும் கேட்டுக் கேட்டு வந்த அவருக்கு நெடுஞ். செழியனின் திருச்சி விஜயம் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிளைவ் விடுதியின் கட்டுத்திட்டப் பிரகாரம் இரவு மணி ஏழே முக்காலுக்குக் கச்சிதமாக வெளி வாசலைத் தாளிட்டு விடுவார்கள். ஆனால், கட்சியின்பால் கனிந்த வெறி, அவரை ஆட்டிப் படைக்கவே, ஆட்டிப் படைத்திட்ட தலைவரின் பேச்சைக் கேட்க, டவுன் ஹாலுக்குச் சென்றார், அவருக்கு ஜமா சேர, டவுனில் தங்கியிருந்த தோழர்கள் உதவிஞர்கள். பேச்சு முடிந்து, நடந்து வரும்போதுதான்,