பக்கம்:உயிரில் கலந்தது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நாவலைப் படமாக்க அனுமதி கோரியும் விரைவில் புறப்பட்டு வந்து, சம்மானத் தொகையை நிர்ணயம் செய்து முன் பணம் பெறும்படியும் சொன்னது. திரை உலகின் தலைவாசலை மிதிப்பதற்குள், இந்த மூன்று நான்கு ஆண்டுகளிலே தாம் அனுபவித்த தோல்விகளையும் ஏமாற்றங்களையும் அவர் புள்ளி போட்டுப் பார்த்தார். கடுகத்தனைகூட இலக்கிய ஞானமே இல்லாத தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் இரண்டொருவர் பண்ணிய போலி ஆடம்பரங்கள். நடிகர்களுக்குப் பதிலாக, அவர்கள் பரமரசிகர்களாக நடித்த நடிப்பு: அவர்களுக்குத் தானம் போட்ட கூஜாப் பேர்வழிகள்; எல்லோருக்குமே ட்ரேட் மார்க்கான வில்க் சட்டைகள்; மூவக் கதையைக் கேட்க ‘பில்வியர்ட்ஸ் சிகரெட்’ டின்னுடன் காத்திருந்த பைஜாமா டைரக்டர், பைஜாமாலை நம்பியிருந்த அப்பாவித் திரைக்கதை வசனகர்த்தா, அந்த வசனகர்த்தாவுக்கு வல்லினம் மெல்லினம் தெரியாவிட்டாலும், எக்ஸ்டிராக்கிளின் ஜாபிதாவை மனப்பாடம் செய்யத் தெரிந்திருந்த அந்தப் பிழைப்பு—இத்யாதி நிகழ்வுகள் திரைச் சுருள்களாக விரிந்தன,

“திரை உலகம் என்பது மாயாலோகம் ஸார். எதுவும் கண்ணுக்கும் மெய்யாக நடந்தால்தான் நிச்சயம்,” என்று ஒருமுறை விந்தன் அவர்களும், மறுமுறை அந்நாளைய சிவாஜியும் படித்துப் படித்துச் செப்பின மதிப்புக்குரிய கருத்துக்களையும் அவர் மறந்துவிடமாட்டர்.

நிலா முற்றத்தில் பகல் செய்வோன் கதிர்களை கடைப் பரப்பியிருந்தான்.

“சினிமா சான்ஸ் கைகூடினால் ஆண்டவன் கடாட்சம் தான். வாணியின் வருகை சுபசூசகமாகத்தான் அமையத் தொடங்கியிருக்கிறது. தமிழரசி பத்திரிகையின் வருமானமான இரு நூறு ரூபாயும் அடுத்த மாசத்துடன் நின்றுவிடும். ஏனென்றால் என் பணியும் நின்றுவிடும். முதலாளியின் மனசுக்கு உகந்த காரியத்தைச் செய்ய முடியாமல் {{hws|இருக்|இருக்கையில்,}]