பக்கம்:உயிரில் கலந்தது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


அதிபர் மணிமுத்து வேலாயும் கடிதம் அனுப்பியிருந்தார். “அன்புள்ள ஞானசீலன்,

உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உங்கள் சொந்த விஷயங்களில் குறுக்கிடும் உரிமையை நான் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன், உங்கள் கருத்தை வெள்ளையாகச் சொல்லிவிட்டீர்கள். எனக்கு ரொம்பத் திருப்தி. உங்கள் காதலி வாணியுடன் நடக்கயிருக்கும் உங்கள் கலியாணத்தை நானே முன்னின்று நடத்தி வைக் கிறேன். எல்லாம் என் செலவு. இது என் கடமை களுள் ஒன்றல்லவா? நீங்கள் ஆராதிக்கும் அன்பு மகத்தானது! -

பிற நேரில்... அன்புடன், மு. மணிமுத்து வேலாயுதம்.

செய்தி ஒன்றைச் சொன்னுள் அம்மா. வாணிக்கு மூன்றுநாள் லீவு!... கமலாட்சிக்கு தேதி வைத்ததற்கு ஐந்தாம்நாள் கழித்து ஆஞானசீலன்-வாணி கல்யாணத்திற்கு நாள் குறித்துக்

கொடுத்தார் புரோகிதர், -

அதற்குள் பட்டணத்துக்குப் புறப்பட்டுத் திரும்பிவிட வேண்டுமென்பது அவர் முடிவு. ‘என் அதிபரின் அன்பையும் பண்பையும் எப்படிப் புகழ்வது? - -

வெயில் ஏறுமுகம் காட்டியது. வாணி வீட்டுக்குக் குளித்து முழுகி வரவேண்டிய :கெடு.

எதிர் நோக்கிக் கிடந்தார் எழுத்தாளர். அப்பொழுது, புடவைச் சலசலப்புக் கேட்கவே ஆவல். அமீதுாரத் திரும்பினர் அவர். -