பக்கம்:உரிமைப் பெண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

உரிமைப் பெண்


எனக்குத் தெரியாது, விட்டுக்குள்ளே போய்ப் படுத்துக் கொண்டார்கள். மறு நாளே காய்ச்சல் வந்து படுத்தவள் தான்: அப்புறம் எழுக்திருக்கவே இல்லை. போய்விட்டாள். ராமசாமி அலறித் துடித்தான். அவனுக்கு அந்த ஏக்கம் தீரவேயில்லை. என் மகன் நாளுக்கு நாள் துரும்பாக இளைத்துக்கொண்டே வந்தான். நானும் எத்தனையோ ஆறுதலெல்லாம் சொன்னேன். இன்னொரு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவனுடைய துயரம் ஆறாத் துயரமாகி விட்டது. மாரு என்மேல் நீ கோபங் கொள்ளப்படாது. நானும் ரொம்ப வருத்தப்பட்டேன். இப்படி யெல்லாம் வரும் என்று எனக்கு எப்படித் தெரியும்? அதென்னமோ எனக்குப் பொல்லாத காலம். வேலாத்தாள் என்னிடம் பிரியமாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் அப்படித் தாராளமாக மகள் மாதிரி நடந்துகொள்வது எனக்குப் பிடிக்காமல் போயிற்று. மருமகள் என்றால் பயந்து கொண்டிருக்க வேண்டுமென்றோ என்னமோ ஒரு எண்ணம் என்னேயறியாமல் மனசுக்குள்ளே இருந்திருக்கிறது. அதனாலே தான் அவளை அப்படிப் பேசிவிட்டேன்.

அதனாலேதான் நான் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன். என் மகன் உருகிக்கொண்டே வந்தான். என்ன செய்தும் அவன் தேற வில்லை. வேலாத்தாள் இறந்து இாண்டு வருஷங்கூட அவன் உயிர் வாழவில்லை. அத்தனை காலமும் உன்னைப் பார்த்துத்தான் ஒரு மாதிரி உயிர் வைத்திருந்தான்.

“ஒரு நாள் மறுபடியும் பெரு மழை வந்தது. தாங்கிக்கொண்டிருந்த உன் தகப்பன் திடீரென்று எழுந்து அந்த மழைக்குள்ளே ஒடினான். நான் சத்தம் போட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/73&oldid=1138035" இலிருந்து மீள்விக்கப்பட்டது