உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

● 1965-ல் சுதேசமித்திரன் மாணவர்
மலரில் இலட்சியமும்
வாழ்க்கையும் என்ற கட்டுரையை
இவர் படத்துடன் வெளியிட்டுச்
சிறப்பித்துள்ளது.
● பள்ளியில் படிக்கும்போதே
பேச்சுப் போட்டி, எழுத்துப்
போட்டிகளில் வெற்றி பெற்றுப்
பல பரிசுகளும் பெற்றுள்ளார்.
● நம்நாடு, முரசொலி, தனி அரசு,
மாலைமணி, இனமுழக்கம்,
கழகக்குரல், உழைப்பாளி, சங்கொலி
போன்ற பல ஏடுகளில் கதை,
கட்டுரை எழுதியுள்ளார்.
கண்ணியம் : ● கண்ணியம்' என்ற இலக்கிய
இதழைப் பத்து ஆண்டுகளாக
ஆசிரியராக இருந்து நடத்தி
வருகிறார்.
● மறைந்த தொழிற்சங்கத் தலைவர்
திரு. காட்டூர் கோபால் நடத்திய
'உழைப்பாளி' இதழில்
எண்ணங்களை வெளியிட்டார்.
விருதுகள்
பாவேந்தர் பட்டயம் : காஞ்சியில் பாவேந்தர் மகன்
மன்னர்மன்னன் சார்பாக
வழங்கப்பட்டது.
எழுத்தாளர் திலகம் : பேராசிரியர் முனைவர் அய்க்கண்
"எழுத்தாளர் திலகம்" என்ற
பட்டத்தை வழங்கினார்.