பக்கம்:ஊசிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிரொளி



பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரி மார்கள்
மத்தியில் சொன்னார்:

"விருந்தைக் குறைப்பீர்!
வெளிநாட்டுக்குப்
பறந்து போகும்
பழக்கம் குறைப்பீர்

தொலைப்பேசியிலே
சலசலவென்றே
பேசித் தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர்

குளுகுளு காரில்
கூட்டங்களுக்குச்
செல்வதைக் குறைப்பீர்
செலவைக் குறைப்பீர்......!"

எங்கோஇருந்தோர்

எதிரொளி கேட்டது:

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/50&oldid=1013584" இலிருந்து மீள்விக்கப்பட்டது