பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல்

101


தொடுக்கின்ற சொற்போரில் தோல்வி நேரின் ’துணித்தெனது தலையெடுத்து வைப்பேன்’ என்று விடுக்கின்ற அறைகூவல் உடையார், நெஞ்சில் விளைபுலத்துப் பெருக்குடையார், வறுமை வாழக் கொடுக்கின்ற வாழ்வுடையார். எனினும் என்றும் குன்றாத பெருமிதமே உடையார், எங்கும் அடுக்கின்ற பணிவுடையார், சோழ வந்தான் அழகியநல் லுருடையார், உடையார் என்றும் எளியவர்க்குள் எளியரென விளங்குந் தோற்றம் இலக்கணத்தில் நிகரில்லா திலங்கும் ஏற்றம் துளியனைத்து மஞ்சாத புலமை வீரம் துயர்கண்டு மனமிரங்கி அருளும் ஈரம் வழிவகுக்கும் திருக்குறளின் பாட்டுக் கிங்கு வளமான விருத்தியுரை தந்த செல்வர் அளிமிகுத்த மலர்சூழும் சோழ வந்தான் அரசஞ்சண் முகனாரின் தொடர்பும் பெற்றார். உரைசால் மணியர் ஒங்குயர் புலவர் அரசன் சண்முகர் ஆருயிர் நட்பைப் பெற்ற முறையோ பெருவியப் பாகும் முற்றுமந் நட்பை முறையாற் கூறுதும்: அணிமையில் அமைந்துள மருத்துவ மனைக்கு மணியார் ஒருநாள் வந்தா ராக, மருத்துவர் அங்கிலர் ஆதலின் வந்தவர் பொறுத்தவண் இருந்தார்; புல்லிய குடுமியும் மெய்ப்பை யணியா மேனியும் உடையார் "எய்ப்புடன் ஒருவர் இருந்தார். அவ்வுழை அடிமைப் பணியாள் அவரென நினைந்து 'குடிநீர் கொஞ்சம் கொணர்க’ என்றனர்: அவரும் இவர்நிலை அறிந்துளம் இரங்கிக் குவளையில் தண்ணீர் கொடுத்தனர்; பின்னர்ப் பண்டித மணியார் பசித்தவ ராகி, சட்டை"இளைப்புடன் |[] I 10 15