பக்கம்:எனது நண்பர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டபிள்யூ பி. ஏ. செளந்திர பாண்டியன்

பாண்டியர் வரலாறு

மிழக வரலாறு எழுதப்படும்பொழுது அதில் பாண்டிய நாட்டு வரலாறு முதலிடம் பெறும். பல பாண்டியர்களின் வரலாறு தமிழகத்தில் மங்கி மறைந்து கிடக்கின்றன. அவற்றுள் ஒன்று செளந்திர பாண்டியரின் வரலாறு.

மதுரை மாவட்டம் நிலக்கோட்டை சிறுவட்டம் வத்தலக்குண்டைச் சார்ந்த பட்டிவிரன்பட்டியில், 1893 இல் பிறந்தார், திரு. செளந்திரபாண்டியர். இவரது தந்தை திரு. ஊ. பு. அய்ய நாடார்; தாய் சின்னம்மாள். அக்காலத்தில் பொதிமாடுகளில் சரக்குகளைச் சுமந்து பல சிற்றுார்களுக்குச் சென்று, நாணயமாக வணிகம் நடத்திப் பெரும் புகழ்பெற்றவர் திரு. அய்ய நாடார்.

திரு. பாண்டியருடைய சகோதரர் திரு. ஊ. பு, அ ரெங்கசாமி நாடார். இவரது சகோதரிகள் மூவர்.

தனது 20 ஆவது வயதில் திருமதி பாலம்மாள் இவரது வாழ்கைத் துணைவியரானார். இவருக்கு ஆண்மக்கள் மூவர். ஒரே மகள் விஜயாம்பிகை.

கம்பீரமான தோற்றம்

திரு. செளந்திரபாண்டியன் கடினமான உழைப்பாளி , உயர்ந்த பயிர்த் தொழிலாளி; பெரிய தோட்ட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/78&oldid=986137" இலிருந்து மீள்விக்கப்பட்டது