பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

________________

வெளிவந்துவிட்டது! "மக்களுக்குத் திண்டாட்டம் வெள்ளையருக்குக் கொண்டாட்டம் " பக்கங்கள் 25 விலை 3 அணு இதில், சென்னை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தோழர் பி. ராமமூர்த்தி நிகழ்த்திய பிரசங்கம் முழுமையும் அப்படியே கூட்டாமல் குறைக்காமல் கொடுக்கப்பட்டுள்ளது. விபரங்களுடன் ராஜாஜி சர்க்காரின் ஜனவிரோதக் கொள்கைகளை புள்ளி அம்பலப்படுத்தியிருக்கிறார், ராமமூர்த்தி. அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய 'சூடான' நடப்பு அரசியல் வெளியீடு. "பிரிட்டிஷ் கியானாவில் நடப்பதென்ன ?" பக்கங்கள் 18 விலை 2 அணு காமன்வெல்த் ஜனநாயகம் யுத்தக் கப்பல் ஜனநாயகம் என்பதை அம்பலப்படுத்துகிறது, பிரிட்டிஷ் கியானாவில் நடக்கும் சம்பவங்கள். கியானாத் தலைவர்கள் இப்பொழுது இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி சபை டிஸ்மிஸ் செய்யப்பட்டதேன்? அங்கு அரசியல் சட்டம் ரத்தாகி இராணுவ யதேச்சாதிகாரம் நடப்பதேன்? பேய்த் தாண்டவங்களுக்குப் பின்னுள்ள சக்திகள் யாவை கியானா தொழிலாள, விவசாய மக்களின் நிலைமை என்ன? அவர்கள் எவ்வாறு வீரதீரத்துடன் போராடுகிறார்கள்? இத்தருணத்தில் இந்திய மக்கள் கடமை என்ன? முதலிய கேள்வி களுக்கு பதிலளிக்கிறது இந்த வெளியீடு. உடனே பிரதிகளுக்கு முந்துங்கள்! ஜனசக்தி பிரசுராலயம் சென்னை-14.