பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nest

163

net


யை மற்றொரு பகுதியில் பதியச் செய்தல். A என்னும் நடைமுறைச் செயலை B என் னும் நடைமுறைச் செயலோடு சேர்த்தால். இதனால் B செயற்பாடு தானாகவே A யைச் செயற்படவைக்கும்.

nesting loop - கூடுடை சுற்று : ஒரு நிகழ்நிரல் துணுக்கம். இதில் ஒரு சுற்றுக் கட்டளைகள் மற்றொரு சுற்றைக் கொண்டிருக்கும். இச்சுற்றுகள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.

net monitor - இணையக் கண்காணிப்பி : வலையகப் பயணத்தின் பொழுது நல்ல தகவல்களைத் தரும்.

net parameters - இணையச் சுட்டளவுகள் : இவை நாம் பெறும் அல்லது அனுப்பும் மின்னோட்ட விரைவு, தகவல் அளவு ஆகியவை; இணைய வாழ்வை வசதியுள்ளதாக்குபவை.

net, the - இணையம் : உலகின் மிகப்பெரிய கணிப்பொறி வலையமைப்பு. இண்டர்நெட் என்ற சொல்லின் சுருக்கம். அகவை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தும் கருவியமைப்பு. எப்பொருள் பற்றியும் செய்தியளிப்பது. உலகைப் பார்க்க உதவும் பலகணி. நன்மை தீமை ஆகிய இரண்டையுங் கொண்டது.

network - A series ofinter connected computer terminals providing a data communication service. Eg. Prestel. வலையமைவு : வலையம் ஒன்றுடன் மற்றொன்று இணைந்த கணிப்பொறி முனையங்கள்: தகவல் தொடர்புப் பணியை அளிப்பது, எ-டு. பிரஸ்டல்.

network addressing - வலைய முகவரி : வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொறிகள் இணைக்கப்படுமானால், ஒவ்வொரு கணுவையும் அடையாளம் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு தனி எண் கொடுக்கப்படுகிறது. இதற்கு இணைய மரபுச்சீர் Opsas (Internet protocol address) என்று பெயர். இந்த எண் 4 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 255க்குக் கீழ் இருக்கும்; முற்றுப் புள்ளிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். எ-டு. 192.168.1.1, 192112.246.65, 12345.74. 254 இந்த எண்களில் ஒவ்வொன்றும் எண்மி (Octet) எனப்படும். நான்கு எண்மிகள் சேர்ந்து 32 பிட்டுகளைக் கொள்ளும்.

network applications - வலை