பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

கங்கை பூமிக்கு வந்த விதத்தை முனிவர் கூறக் கேட்ட அரச குமாரர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்; மகிழ்ந்தார்கள். பின்பு கங்கா தேவியை வணங்கி ஆறு கடந்தார்கள்.

இவர் தம் வருகை அறிந்த விசாலை நகர் அரசன் வந்து இவர்களை வணங்கினான். அவனுடன் அளவளாவி இனிய மொழிகள் பல பல கூறிய பின் மூவரும் அப்பால் சென்றனர்.

𝑥𝑥𝑥𝑥

தோள்களை உடைய அரசன் வந்து–இவர்கள் வரவு அறிந்து வந்து; இணை அடி குறுக – திருவடிகளிலே வணங்க; நின்று – அங்கே தங்கி; நல்லுரை விளம்பி—அந்த அரசனுக்கு இனிய நல்ல சொற்களைக் கூறி; மற்று—பின்பு; அவ் வயின் நீங்க–அவ்விடம் விட்டுச் சென்றார்கள். என்று கூறலும்—என்று இவ்வாறு (கங்கையின் வரவை) முனிவன் கூறலும்; (இராமனும் இலட்சுமணனும்) வியப்பினோடு—மிகுந்த ஆச்சரியத்துடனே; உவந்து– மகிழ்ந்தவர்களாய் கங்கையை இறைஞ்சி–கங்கையை வணங்கி; (பின்பு மூவரும்) சென்று தீர்ந்தனர்—ஆறு கடந்து அக்கரை சேர்ந்தனர். (அப்போது) விசாலை வாழ் – விசாலை எனும் நகரில் வாழ்ந்த; சிகரம் குன்று போல் புயத்து அரசன்—சிகரத்துடன் விளங்கும் குன்று போலும்.

𝑥𝑥𝑥𝑥

ரம்பில் வான் சிறை
        மதகுகள் முழவொலி வழங்க
அரும்பு நாள் மலர் அசோகுகள்
        அலர் விளக்கு எடுப்ப
நரம்பினான்ற தேன் தாரை
        கொள் நறுமலர் யாழின்
சுரும்பு பாண் செயத் தோகை
        நின்றாடுவ சோலை.