பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சங்கத்தார் பலரும் சேர்ந்து நூல் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இன்னின்ன நூலை இன்னின்னார் சீர் செய்ய வேண்டும் எனப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதன் படி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் மேற்பார்வையில் உருத்திர 56TD நெடுந்தொகையைத் தொகுத்தார்.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புலவராகவும் திகழ்ந்தார். நெடுந் தொகையில் அவர் பாடல் (26) ஒன்று உள்ளது. எனவே, நெடுந்தொகை, கி.பி. முதல் நூற்றாண்டிற்குள் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்த மன்னரைப் பற்றிய செய்தி. நெடுந்தொகையில் (251,265) கூறப்பட்டிருத்தலால், இந் நூல் கி.மு. நான்காம் நூற்றாண்டிற்குப்பின் தொகுக்கப்பட்டதாகும். பல சான்றுகள் கொண்டு பார்க்குங்கால், நெடுந்தொகை கி.மு. முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது எனக் கூறலாம்.

அகப்பொருள் நூல்களுக்குள் மிகச் சிறந்ததாதலின், அகம்-அகப்பாட்டு-அகநானூறு என்றெல்லாம் இந்நூல் விதந்து குறிப்பிடப்படும். நெடுந்தொகை நூல் தொகுப் புக்கலை வரலாற்றின் சுருக்கம் இது. பல மொழித் தொகைநூல்களைப் பற்றி ஆராய்ந்துள்ள அடியேனுக்கு, நெடுந்தொகைத் தொகுப்பளவு கலை நுட்பம், வேறு எம்மொழியிலுள்ள எந்தத் தொகை நூலிலும் இருப்பதாகத் தோன்றவில்லை. தமிழ்நூல் தொகுப்புக்கலை வாழ்க!