பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7


பூவழகி சந்திப்பு

ழகு பேசிக்கொண்டிருந்த அந்தப் பூவையின் மதர் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்த ஞானபண்டிதன் இமைப்பினை மறந்துவிட்டானோ ? – ஆம்; அப்படித்தான் அவன் தோற்றம் இருந்தது.

அழகுக்கு அழகே சாட்சியாக – உண்மையாக – உத்தாரமாக அமைந்த பாங்கில், அவன் அழகும் அவள் அழகும் அமைந்துவிட்டிருந்தன போலும்!

அவளுடன் எப்படிப் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் அவள் எழுந்துகொண்டாள். இப்போது அவள் கையில் ‘டிபன் பாக்ஸ்’ இருந்தது. புறப்பட எத்தனம் செய்தாள்.

“பூவழகி!” என்று குரல் கொடுத்தான் ஞானபண்டிதன்.

பூவழகி பூவிழிகளைச் சிமிட்டி, குறுஞ்சிரிப்பு உதிர்த்து, வியப்புடன் அவனை ஏறிட்டு விழித்தாள்.

“என்னையா?”

“ம்!”

“தெரியுமா என்னை ?”

“ம்!”

நேற்று இரவு அவன் நேருக்கு நேராகப் பார்த்த காட்சியை விவரித்தான், அவளிடம்.

அதே செங்கோடனுக்குத்தான் சாப்பாடு வாங்கிக்கொண்டு போவதாகத் தெரிவித்தாள் அவள். பட்டணத்துப் போக்கிரி ஒருவன் என்னை – என் கற்பைச் சூறையாட முனைந்த நேரத்திலே தெய்வம் போல – தெய்வமாக வந்து – என்னைக் காத்தார் இந்தச் செங்கோடன். அந்த நன்றியை நினைச்சுப் பார்க்கக்கூட ஒரு சந்தர்ப்பத்தைத் தராமல், இப்போது என்னைப்