பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலை போச்சு!

39



அந்தக் கடைக்கு முடிசூடா மன்னராக விளங்கும், முகுந்த ராஜா முதலியாரின் மூத்த குமாரி, சௌபாக்யவதி விசாலாட்சி அம்மாளின் விவாகம், விமரிசையாக இன்று காலை நடைபெற்றது மணமகன் மணி அரசு முதலியார், ஜெகஜோதியான வைரக் கடுக்கன்கன் அணிந்து காட்சி அளித்தார். ஸ்ரீமதி விசாலம் புதிய காசுமாலையுடன் காட்சி தந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்ரீமான் முதலியாரின், வைதிக சிரத்தையை அறிந்த பிராமண சிரேஷ்டர்கள், காலையிலே, வேதம் ஓதினர் ! இது புதிய முறையல்ல. பழைய ராஜாக்கள் காலத்திலே இதுவே சம்பிரதாயம்! மாங்கலியதாரணம், முதலிய சர்வ சம்பிரதாயக் காரியங்களும் இனிது நிறைவேறிய பிறகு, உள்ளூர் வெளியூர்ச் சீமான்கள், மொய் எழுதினர். மாலையிலே அருமையான சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. ஆனால் ஒரு விஷயம் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. சங்கீதம் சாஸ்திரோக்தமாக இல்லை, அது என்னமோ தமிழ் இசை என்று சிலர் கூறுகிறார்களே, அதுவாம் அது. ஊர்வலம் நடைபெற்றது ஊரெங்கும் இதே பேச்சு, இவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல இருந்தது, காலையும் மாலையும் கலியாணத்துக்குச் சாமி காவடியானந்தர் விஜயம் செய்தது. அவர் நமது ஆசிரியர் அனுமந்தராவிடம் அன்யோன்யமாகப் பேசியது கண்டு, "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்று பலர் கூறினர். முகஸ்துதியில் பிரியமில்லாத நமது ஆசிரியர், அந்தப் புகழுரையைக் கேட்டும் கேட்காதவர் போலிருந்தது, குறிப்பிடத் தக்கது.

இது தான் ஆசிரியர் தந்தது. இதிலே தான் விசாலம் விசாரமாகி, விவாகம் விவாதமாகி, சாமி காவடி யானந்தர் காமி சாவடியானந்தராகி, காசுமாலை காமாலையாகி, மணி அரசு பிணி அரசாகி, வேதம் பேதம் என்றாகி, மொய் பொய் என்றாகி வெளிவந்தது, எல்லாம் அச்சுப் பிழை தான். ஆனால் ஆசிரியர் அனுமந்தராவ், "தம்பி! என் வாழ்க்கையையே வதைத்துவிட்டாய்" என்று போட்ட கூச்சல், உண்மையாகவே, நான் செய்த பிழை மிக மிகக்