பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலை போச்சு!

45



எப்படிச் சொல்ல முடியும். சாமியாராம்! காவடியானந்தராம்! காமி, சாவடியிலே ஆனந்தராக இருந்தார். தேவாரமா பாடினார்! தில்லானா பாடினார்! பச்சை, சாமியாரிடம் விபூதிப் பிரசாதமா கேட்டாள், 'எடு எடு ! பணத்தை! ஏழுநாளா ஏச்சிக்கிட்டே வாராயே' என்றாள். விபூதிப் பையிலே இருந்து கல கலவென்று ரூபாயைக் கொட்டினான் அந்தக் காமி. ஐந்து ரூபாயைக் கொடுத்தான் பச்சையிடம்.

"மிச்சத்தை இப்படிப்போடு சாமி" என்று கூறிக்கொண்டே நான் போய் நின்றேன் பக்கத்திலே. அலறிப் போனான் அந்த ஆண்டி அவளும் ஆந்தை போல விழித்தாள். சாமியாரை நான் பேசவிடவில்லை."மகா யோக்யர் போல நான் செய்த மற்றத் தப்பெல்லாம் சரி என்று நமசிவாயத்துக்குச் சொன்னாயே, உன் பெயரை சாமி காவடியானந்தர் என்று அச்சடிக்கணும், காமி சாவடியானந்தர் தானே நீ" என்று கேட்டேன். ஆசாமி கைப்பிடியாக அகப்பட்ட பிறகு பயமென்ன. பயம் போய் விடவே, புத்தியும் கொஞ்சம் தீட்சணியமாக வேலைசெய்ய ஆரம்பித்தது. "கைதவறி மாற்றி மாற்றி அச்சடித்தேன் என்று தானே சொன்னே. தவறிச் செய்ததில்லை, சகல விஷயமும் தெரிந்துதான் அச்சடித்தேன். மரியாதையா பணத்தைப் போடு" என்றேன். என்னடா இது, கொள்ளை அல்லவா அடிக்கிறேன் என்று கோபமாக உங்களுக்கு. இந்தக் கூத்திக் கள்ளன் சாமியார் வேஷத்திலே அடிச்ச கொள்ளையிலே, இது எந்த மூலை? பணத்தைக் கொடுத்தான். விட்டேனா? "சரி" எங்க அச்சாபீஸ்காரன் உனக்குச் சினேகிதனாச்சே, அவனிடம் எப்படியாவது சொல்லி, மறுபடியும் நம்மை வேலையிலே சேர்த்துக்கொள்ளச் சொல்லணும் தெரியுதா? என்றேன் சரி என்றான் அழுகுரலில்.

இருட்டு, நடுநிசி, ஒருபயமும் இல்லாமல், வீட்டுக்கு நடந்தேன். அந்த இரண்டு சனியன்களும் கொஞ்சம் தொலைவாகவே என் பின்னால் வந்தார்கள். வீட்டுக்குப் போனேன், வேகமாக கதவைத் தட்டினேன், கொஞ்சம்