உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கற்பனைச்சித்திரம்



கத்தை ஆரம்பிக்கும்போதே ஜெமீந்தாரரின் சீர் சிறப்புப் பற்றியும் குலப்பெருமை குடும்ப கௌரவம் பற்றியும் கொடை நடைபற்றியும் பாராட்டியன்றோ பேசவேண்டும். அவருக்கும், தமிழை அந்த காலத்திலே வளர்த்த மூவேந்தர்களுக்கும் உவமை காட்டி, அவருடைய உள்ளத்தை உருக்கவேண்டாமா? அதை எழுதாமல் வேறு எதை எதையோவன்றோ இதுவரை எழுதியிருந்தோம். இந்தப் பிரசங்கம் கூடாது. இதை மாற்றி எழுதியே ஆகவேண்டும். ஒரு விருத்தம், ஜெமீன்தாரரின் குணாதிசயத்தை புகழ்ந்துபாட வேண்டும் சரி! சரி! நிரம்ப வேலையிருக்கிறது. ஆனால் ஐயர்தான் அவசரம் வேண்டாம் என்று கூறிவிட்டாரே தயார்செய்து விடலாம் என்று எண்ணினார்.

"நம்ம ஜெமீன்தாரர், இந்த விழாவை ரொம்ப விமரிசையாக நடத்திவிடவேண்டுமென்று முனைந்து நிற்கிறார். நான் சொற்பொழிவுடன் நிறுத்தலாம் என்றேன் அவர், "அது கூடாது. புலவரின் சொற்பொழிவுடன் பாட்டுக் கச்சேரியும், நடனக்கச்சேரியும் நடத்திவிடவேண்டும் என்று கூறினார். பிரசங்க பூஷணத்துக்கு பெரிய ரோஜாப்பூ மாலை போட்டாகவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். மல்லிகை மாலைதான் தயார் செய்தேன் என்று சொன்னேன். அவருக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவருடைய புலமை என்ன, அறிவு என்ன, ஆராய்ச்சி என்ன, அவருக்குக் கேவலம் மல்லிகை மாலையாபோடுவது. அதை உங்கள் கோயில் மாட்டின் கழுத்திலே போடு என்று கோபித்துக் கூறினார். ரோஜா மாலையே வாங்கிவிடுவோம் என்று கூறினேன்.

சதிர்க் கச்சேரிக்குச் சிந்தாமணி சகோதரிகளையும், பாட்டுக்கச்சேரிக்குப் பழனியப்பனையும் ஏற்பாடு செய்து விட்டாராம். செலவு அவருடையது. நாயனத்துக்கு நல்ல கண்ணு பார்ட்டி, ஏற்பாடாகிவிட்டது. நான் ஏதோ சாமான்யமாக ஒரு சொற்பொழிவு நடத்த நினைத்தேன், அது பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. இன்னும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சதிர் நடத்தப்போகும் சிந்தா-