பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பர். அறுபட்ட தலைகள் தேவியைத் துதிக்கும்; தலை குறைந்த உடலங்கள் அவளைக் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[1]

[அணங்கு-காளி; கொற்றவை - காளி; பரவும்- துதிக்கும்]

என்ற தாழிசையில் அக்காட்சியைக் கண்டு மகிழ்க.

அச்சச் சுவை

அச்சம் மாந்தர்களின் உடன்பிறந்த சொத்து என்று சொல்லவேண்டும். அச்சவுணர்ச்சி இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. அவரவர்கள் மனோதைரியத்திற் கேற்றவாறு அச்சத்தை உண்டாக்கும் பொருள்கள் வேறுபடலாம் ; பயவுணர்ச்சி மட்டிலும் எல்லோரிடமும் அமைந்திருக்கும். இவ்வளவு பழக்கமான சுவையைக் கவிஞர்கள் ஒரு இலக்கியத்தின் முக்கிய சுவையாகக் கொண்டிராவிடினும், அதனை ஆங்காங்கு சிறப்புடன் சித்திரித்திருக்கின்றனர்.

குலோத்துங்கனின் சேனை கலிங்க நாட்டிற்குள் புகுந்து ஊர்களை நெருப்பால் கொளுத்தி சூறையாடுவதைக் கேட்டவுடன் கலிங்கநாட்டு மக்கள் எங்கே புகலிடம்? யாரோ அதிபதி? என்று கூறிக்


  1. தாழிசை-111