பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிமானச் சுற்று கலீபா ஹாரூன் ரஷீத் பல கதைகளில் இடம்பெறுவ தால், அவரது காலத்துக்குப் பின் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் இந்நூல் தொகுக்கப்பெற்றிருக்க வேண் டும் என்று தெரிகிறது. என். பீ.அ.ஐ. அரிமானச் சுற்று: பார்க்க : ஆறுகளின் வேலை - அரிமானச்சுற்றும் பள்ளத்தாக்கு வளர்ச்சி யும், 1-473. அருணாசல நாவலர், நா, வீரவ நல்லூர்: பார்க்க : விரிவு நிகண்டு, 9-356. அருணாசலம் பொன்னம்பலம், சர்: பார்க்க: பொன்னம்பலம் அருணாசலம், சர்.7-694. சைவ அருள் நமச்சிவாய தேசிகர் : சமயாசாரியர்கள் சமயகுரவர், சந்தான குரவர் என இருவகைப்படுவர். இவ்விரு வகையினருள்ளும் சந் தான குரவர்களை அகச் சந்தானம், புறச் சந்தானம் என்று இருவகையாகப் பிரிப்பர். நந்தி, சனற்குமாரர், சத்திய ஞான தரிசனிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகிய நால்வரும் அகச் சந்தான குரவர்கள் எனப்பெறு வர். இந்நால்வரும் உலகமுகப்படாது கயிலாயத்தி லேயே இருப்பவர்களாதலின் அகச்சந்தான குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மெய்கண்டார். அரு ணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் உலகத்தில் மக்களுடன் வாழ்ந்து மக்கட்குச் சிவஞானோபதேசம் செய்தவர்களாதலின் இவர்கள் புறச் சந்தான குரவர்கள் என்று வழங்கப்படு கின்றனர். இந்நால்வருள் மூன்றாவது ஆசிரியராகிய மறைஞான சம்பந்தரிடத்தில் முன்னர் உமாபதி சிவமும், பின்னர் அருள் நமச்சிவாய தேசிகரும் சிவ ஞானோபதேசம் பெற்றவர்கள். உமாபதி சிவம் சிதம் பரத்துக்குக் கிழக்கே உள்ள கொற்றவன்குடியில் வாழ்ந்தவர். அவர் சிவ பரிபூரணம் எய்துங்காலத்துத் தமது பூஜாமூர்த்திகளையும், பீடாதிபத்தியத்தையும் அருள் நமச்சிவாய தேசிகரிடம் ஒப்புவித்துச் சந்தான பரம்பரை மேன் மேலும் வளர முதல்வராக இருக்க என அருள் பாலித்தார். அருள் நமச்சிவாய தேசிக ரிடம் சித்தர் சிவப்பிரகாசரும், காழிக்கங்கை மெய் கண்டாரும் சிவஞானோபதேசம் பெற்றார்கள். இவ்விரு வரில் சித்தர் சிவப்பிரகாசர் வழியில் திருவாவடுதுறை ஆ,தீனமும், காழிக்கங்கை மெய்கண்டார் தருமபுர ஆதீனமும் வழிவழியாக வளர்ந்துவருகின் றன. உலகத்தைக் காண்டல் மயக்கத்திற்கு ஏது வாகும் என்றஞ்சி மச்சின்மீது தங்கி வாழ்ந்த படியா லும், செட்டியார் மரபைச் சேர்ந்தவராதலாலும், அருள் நமச்சிவாய தேசிகர் மச்சுச் செட்டியார் என்று வழங்கப்படுகிறார். வேளாளர் இவர் சீகாழியில் மரபில் தோன்றியவர். ஒரு மார்கழி மாதத் திருவாதி ரையில் சிவபரிபூரணம் எய்தினார் என்பர். இவர் நூல் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. கி.பி. 1818-ல் வாழ்ந்த உமாபதி சிவாசாரியர் காலத்திலும், அதற்குப் பின்னும் வாழ்ந்தவர். சோ.த. அருளையர் தாயுமானவர் பிறந்த ஊராகிய வேதாரணியம் என வழங்கும் திருமறைக்காட்டில் பிறந்தவர்.தாயுமானவரின் சிறிய தாயாரின் குமார்ர். திருச்சிராப்பள்ளி மன்னரிடம் அரசாங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தாயுமானவர் அம்மன்னரின் மறைவுக் குப்பின் இராமநாதபுரம் சென்று துறவு உள்ளத்துடன் வாழ்ந்தனர். அப்பொழுது சுவாமிகளின் தமையனார் சிவசிதம்பரம் பிள்ளையுடன் தாமும் சென்று கண்டு, வேதாரணியத்திற்குச் சுவாமிகளை அழைத்துச்சென்று, இல்லறம் மேற்கொள்ளுமாறு செய்தனர் என்பர். சுவாமிகள் தாம் இல்லறம் மேற்கொண்ட சில ஆண்டு இ4 25

அல்லிமரைக்காயர் களில் தம் மனைவி இறந்துவிடவே, பின் முற்றும் துறந்த ஞானியாய்ப் பல இடங்களுக்கும் சென்று, இறுதியில் இராமநாதபுரத்திற்கே வந்தனர். சுவாமிகளின் துறவு நிலையில் அவரை அடுத்து மாணவர் பலர் நல்லுப தேசம் பெற்று உடன் உறைந்தனர். இங்ஙனம் சுவாமி களை அடுத்து வாழ்ந்த மாணவர்களில் அருளையர் முதன்மையானவராவர். சுவாமிகள் அவ்வப்போது பாடிவந்த பாக்களை எழுதிவைத்துப் போற்றியவரும் இவரே என்பர். தாயுமானவர் சகம் 1581-ல் (கி.பி. 1659) இராம கீழ்ப்பால் நித்திய சமாதிகொண்டருளியபோது, 'உலகி நாதபுரத்துக்கு அண்மையில் லக்ஷ்மீபுரம் ஊருணியின் னுக்கு அணியாம்' எனத் தொடங்கும் பாடலால் அருளையர் சுவாமிகளுக்குத் தமது அஞ்சலியைச் செலுத்தினார் சுவாமிகள் (பெருந்தொகை 1964) தம்மை ஆட்கொண்டு அருளுபதேசம் செய்தமை குறித்து வியந்து போற்றி அருள்வாக்கிய அகவல்' என்னும் பிரபந்தமும் இவர் செய்துள்ளார். இப் பாடல் 232 அடிகளைக் கொண்டது. சுவாமிகளின் பெருமைகளையும், அவற்றால் பெறப்படும் பேருண்மை சிறப்புக்களையும், அவர் அருளிய அருள் வாக்கின் களையும் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். அருளே உருவுகொண்டு அவனியில் வந்த பொருளே இவன் எனப் பொலிந்திடும் புனிதன் WAY 44 400 கல்லா எனக்கும் கருணைசெய் கடவுள் எண்ணிய எண்ணம் எல்லாம் தெரிந்து தண்ணருள் செய்தவன் தாயு மானவள் ஒருமொழி பகர்ந்த உதவியால் அவன் தன் இருபதம் முப்போதும் இறைஞ்சி வாழ்த்துவனே என வரும் பகுதி அருளையருக்குத் தாயுமானவரிடத்து உளதான ஈடுபாட்டை நன்கு புலப்படுத்தும். மு.ச. அல்லிமரைக்காயர், மீ: சென்ற நூற் றாண்டின் பிற்பகுதியில் சிறந்து விளங்கிய இஸ்லாமி யத் தமிழ்ப் புலவர்களுள் இவர் சிறப்பாகக் கூறத் தக்கவர். நாகூரில் மீறாலெப்பை மரைக்காயர் என் பிரபந்தக் கொத்தைப் பார்வையிட்டு 1878-ல் சென் பாரின் குமாரராக இவர் தோன்றினார். இவர் பாடிய னைக் கலா ரத்நாகர அச்சுக்கூடத்தில் வா. குலாம் ஜெய்னுல் ஆபீதின் மீயா என்பவர் நாகூரில் கொடை காதிறு நாவலர் அச்சிட்டுள்ளார். இவருடைய நண்பர் வள்ளலாகத் திகழ்ந்தார். இவ்வள்ளல் அவ்வூரில் கட்டிய புதிய மாளிகையில் 1884-ல் குடிபுகுந்தபோது அம்மாளிகையின் சிறப்பையும் தமது நண்பரின் பெரு மையையும் குறித்து, 'பங்கலாச் சிறப்புப் பதிகம் எனப் பெயரிய பதிகம் ஒன்று பாடினர். இவர் பாடிய 'பிரபந்தக் கொத்தில்' பத்துச் சிறு பஞ்ச ரத்தினம். 2. நபிநாயகத்தின் பேரிற் பதிகம்.3. பிரபந்தங்கள் உள. அவையாவன: 1. ஹக்குப் பேரிற் இமாம் அசைன்குசைன் ஆண்டவர்கள் பேரில் தசரத் பதிற்றந்தாதி. 5. கலறத்து சாகுல் கமீதாண்டவர்கள் தினம். 4. முகியித்தீனப்துல் காதிறாண்டவர்கள் பேரிற் பேரில் நவமணி மாலை. 6. வண்டுவிடுதூது. 7. அன்னம் விடு தூது- 8.அம்மானை. 9. முனாஜாத்து. 10. நெஞ்சறி வுறுத்தல். இதற்கு வ.குலாம்காதிறு நாவலர் சிறப்புப் பாயிரம் இயற்றியுள்ளார். வேறு என்னென்ன நூல் கள் இவரால் செய்யப்பெற்றன என்று இப்பொழுது அறியக்கூடவில்லை. இவர்தம் பிரபந்தங்கள் எளிய இனிய செந்தமிழ்நடைப் பாக்களால் அமைந்துள்ளன. அரபு, பார்ஸி முதலிய பிறமொழிச் சொற்கள் மிகக் குறைவே. "சிட்டர்தொழு நாகூர்வாழ் செம்மல் கமீதொலியார் துட்ட ரகக்கருளைத் துணித்துவிட்டா ரம்மானை துட்ட ரசுக்கருளைத் துணித்துவிட்டா ராமாயின்