பக்கம்:களத்துமேடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு 2. பேச ஒனக்கு வயசு பத்தாது!...ஏலே...சாம்பான் ! நடடா எட்டி! ... என்று கூக்குரல் பரப்பினார். சாம்பான் சாம்பிய முகத்துடன் புறப்பட்டான். மறந்து விடாமல், கை கூப்பிக் கும்பிடு செலுத்தி விட்டுத்தான் புறப் பட்டான். லேஞ்சை உதறி கண்களைத் துடைத்தபடி புறப்பட்டான். மோனச் செஞ்சுடர் சித்து விளையாடிக் கொண்டி ருந்தது. வாசலில் ஒருபக்கத்தில் கடலைக் காய்களும் மறு பகுதி யில் மிளகாய்ப் பழங்களும் காய்ந்து கொண்டிருந்தன. கஞ்சி குடிக்கக் கூப்பிட்டாள் புதல்வி, தந்தை ஒப்புதல் தெரிவித்தார். அப்போது வந்த ஒரு நபரைக்கண்டதும், 'அடடே... செட்டியவூட்டுத் தம்பியா? வாங்க...குந்துங்க!... என்று வரவேற்றார். வந்தவர், ஊர் வெற்றிலை பாக்குடன் திருமண மடல் ஒன்றையும் மரவையில் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டார் சேர்வை, அழைப்பைப் பிரித்தார். ஆயி, இதைப் படியம்மா!’ என்று கொடுத் தார். ஒதுக்கமாக வந்து நின்ற தைலம்மை உ. சிவமயம், என்று வாசிக்க ஆரம்பித்து முடித்தாள். 'ஆத்தாடி... பலேடா ராசான்னானாம்! நீ உசத்தி, நான் உசத்தின்னு ஒரு அஞ்சு வருசத்துக்கு முந்தி கொத்துப் வழி வெட்டுப்பழி போட்டுக்கிட்டுக் கிடந்த ரெண்டு கட்சிக் காரகளுக்குள்ளாறவே சம்பந்தம் சாடிக்கை குதிர ஆரம்பிச் சிருச்சு... இது இப்பவும்கூட எனக்குச் சொப்பனம் கணக்கிலே தான் தோணுது!...ம்.ஒங்க போத்தக்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/28&oldid=1386202" இலிருந்து மீள்விக்கப்பட்டது