பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நூலறிவும் — உணர்வும்


உடையது, நூலறிவு அல்லது கல்வி என்பது உண்மை மெய்மை பொய்மை மடமை முதலியவைகளை ஆதாரமாக உடையது. கேள்வியறிவும் இவ்வாறே.

ஒருவனுக்கு தன்னிலையில் உள்ள அறிவானது விவாதத்துக்குரிய நூலறிவால் பெருகிவரும் காரணத்தால் பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு தார்க்கீகத்துக்கு உட்பட்டதேயாகும். அறிவினால் எதிர்பார்க்கும் பயன் இன்பவாழ்வு பெறுவதாகும். உண்மையும், மெய்மையும் உடைய இவ்வறிவால் இன்பவாழ்வு பெறுதல் நிச்சயம் பொய்மை மடமைகளையும் உடையதான தார்க்கீக ஞானத்தால் இன்ப வாழ்வு கிட்டுதல் நிச்சயமாகுமா?

தார்க்கீகமாவது இது சரியா? சரி அன்றா? "இது சரியா? சரி அன்றா? சரி என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! பிழை என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! வினைபயன் எதுவாயிருக்கலாம்! தீமையோ! நன்மையோ! என ஒருவன் தனக்குள் தர்க்கம் புரிவதாகும். தார்க்கீக ஞானமானது செயலில் இரங்கத் தீவிரப்படுத்தாது. ஒன்றைப்பற்றி நிச்சயிப்பதற்கும், தயங்குவதற்கும் காரணத்தைத் தானே கண்டுபிடித்திருக்கும் நூலறிவு தார்க்கீகத்துக்குக் குரியதே.

அநுபவஞானம் என்பதொன்று உண்டு. அது உணர்வு, உணர்ச்சி எனவும் சொல்லப்படும்.


கவிஞர் பேசுகிறார்