பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

தமிழும் இசையும்


றது, என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். உயர்ந்த கவிதைகள், கலைகள் என்றால் அவை பகுத்தறிவுக்கு ஏற்றவையாக இருக்கவேண்டும்; உயர்ந்த எண்ணங்களையும் நோக்கங்களையும் பரப்புபவையாக இருக்கவேண்டும். குறுகிய நோக்கம், கொள்கை, லட்சியம் இவற்றைப் புகட்டும் கவிதைகளை

உயர்ந்தவை யென்று சொல்வதற்கில்லை. அவற்றைப் படிப்பதால், போற்றுவதால் ஒரு சமூகம் முன்னேற முடியாது.


கவிஞர் பேசுகிறார்