பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை என்றால் என்ன?

31


என்று கேட்டார்கள். "அடியார் ஒரு பெண் கேட்கிறார். எங்கேயும் கிடைக்கவில்லை. ஆகையால் தான் வருத்தமாயிருக்கிறது" என்றார். ஒருத்தி சும்மா விருந்தாள். மற்றொருத்தி, "தங்கள் சித்தம்; நான் தயார். பண்டாரத்துடன் படுத்துக் கொள்ளுகிறேன்” என்றாள். உடனே அந்தப் புருஷனுக்குச் சந்தோஷமுண்டாகி அவளைப் பார்த்து ”நீ தான் பதிவிரதை” என்று அவள் காலில் விழுந்தானாம். இம்மாதிரியான கேவலமான ஒழுக்கங்களைத் தான் வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கக் கூடிய புத்தகங்களிருக்கின்றன.

இராமாயணம் ஆரியக் கதை. தமிழனை அரக்கனென்றும், குரங்குகளென்றும், கரடிகளென்றும் கூறும் கதை. ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட புலவர், ஆரியக் கதையாகிய இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்றால் எதிர்ப்பானேன்? எரிப்பது கொடுஞ் செயல்; இஃது அவ்வளவு நன்றாயில்லை யென்றால், குளிர்ந்த நீரில் கரைத்து விட்டால் போகிறது. இப்போது. ராமாயணத்தை எரிக்கக்கூடாது என்று எதிர்க்கும் புலவர்கள், அக்காலத்தில் தோழர் பூர்ணலிங்கம் பிள்ளை ”இராவணப் பெரியார்” என்ற புத்தகத்தை எழுதின போது ஏன் இம்மாதிரியான எதிர்ப்புகள் செய்யவில்லை? மறையடிகள் இராமாயணத்தைக் குறை கூறி எழுதினதற்கு ஏன் அப்


கவிஞர் பேசுகிறார்