பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தொண்டு

தமிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவ வேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத் தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டு மானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும்.

புலவர் புலமை என்றால் புதுப்பிப்பவர் புதுமை என்று பொருள். இங்குள்ள புலவர்கள் எதைப் புதியதாக எழுதினார்கள்? புது வெளியீடுகள் எத்தனை வெளி யிட்டார்கள்? கவிஞன் என்பவன் ஓர் மலை, ஆறு, தடாகம், இயற்கை, சோலை, முதலியனவற்றைத்தனது கவிதாத் திறமையால் எழுதுபவன். இங்கு எத்தனைப் புலவர்கள், எவ்வளவு வெளியீடுகள் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இல்லை, கம்பராமாயணத்தை மொழி பெயர்ப்பதும், கம்பராமாயணத்தைச் சுருக்கி எழுதுவதும், பெரிய புராணத்தை வசன நடையில்

சுருக்கி எழுதுவதும், புதுப் புது உரை எழுதுவதும்


கவிஞர் பேசுகிறார்