பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9௧

குடும்ப விளக்கு,


உதவி உடலுக்‌ குயிரே போன்றது!

மாவரசு நாடோறும்‌ வந்து வந்து,

நாவர சர்களின்‌ நல்ல நூற்களும்‌

ஓவியத்‌ இரட்டும்‌, உயர்டற்‌ றுணவும்‌. வாங்கத்‌ தந்து, மகள்நிலை கண்டு போவான்‌, உள்ளத்தைப்‌ புதுவையில்‌ நிறுத்தி; நீடு மணிப்பொறி ஆடுங்‌ காய்போல்‌

தங்கம்‌, தன்வீடு தன்மகன்‌ வீடு

நாடுவாள்‌ மீள்வாள்‌ மணிக்குநாற்‌ பதுமுறை. அயலவர்‌ நாடும்‌ அன்னை நாடும்‌. இனிப்பில்‌ இருநூறு வகைபடச்‌ செய்த. அமிழ்இன்‌ கட்டிகள்‌, அரும்பொருட்‌ பெட்டிகள்‌. வாங்கி வந்து மணவழ கன்தான்‌.

“இந்தா குழந்தாய்‌” என்றுநகை முத்துக்கு ஈந்து போவான்‌, இன்னமும்‌ வாங்‌இட। கறந்தபால்‌ நிறந்திகழ்‌ கவின்‌உடை பூண்ட. மருத்து வச்‌ நாடொறும்‌ வருவாள்‌. நகைமுத்‌ தாளின்‌ உடல்நிலை நாடித்‌: தகுமுறை கூறித்‌ தாழ்வா ரத்தில்‌:

இருந்தபடி இருப்பது கூடா தென்றும்‌ உலாவுக என்றும்‌ உரைத்துச்‌ செல்கையில்‌, வீட்டின்‌ வெளிப்புறத்து நின்று வேடப்பன்‌.. “நகைமுத்‌ துடம்பு நன்று தானே?

கருவுயிர்ப்‌ பஇில்‌ஒரு குறை யிராதே?. சொல்லுக அம்மா, சொல்லுக, அம்மா!* என்று கேட்பான்‌; துன்பமே இராதென 'நாலைந்‌ துமுறை நவின்று செல்வாள்‌. அயலகத்து மயில்நிகர்‌ அன்புத்‌ தோழிமார்‌. குயில்மொழி நகைமுத்தைக்‌ கூடி மூழ்ந்து, கழங்கு, பல்லாங்‌ குழிகள்‌ ஆடியும்‌. எழும்புகழ்த்‌ இருக்குறள்‌ இன்பம்‌ தோய்ந்தும்‌ கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்‌. பறித்தவை நாரிற்‌ பாங்குறத்‌ தொடுத்தும்‌: தொடுத்தவை இருத்திய கழலிற்‌ தடியும்‌: பாடியும்‌ கதைகள்‌ பகர்ந்தும்‌ நாழிகை ஓடிடச்‌ செய்வார்‌ ஒவ்வொரு நாளும்‌: