பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

103


தொட்டன. உயிரைத் தொட்டன; உணர்வைத் தொட்டன. உவப்பிலா ஆனந்தத்தை தந்தன். அந்தச் சொற்கள்தான் என்ன?

"நீ நல்லபிள்ளை... என்றும் நன்றாக இருப்பாய்" என்பனவே அந்தச் சொற்கள்! அருள் நிறைந்த வாழ்த்துக்களுடன் இனிய பண்டங்களும் செல்வமும் கிடைத்தன. அன்று இரவெல்லாம் மகிழ்ச்சிவெள்ளம்! இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவர்களில் முதல் நிலையிலுள்ளவர்கள், இன்று தருமபுர ஆதீனத்தில் மகா சந்நிதானமாக எழுந்தருளியிருப்பவர்களாகிய திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தப் பரமாசாரிய சுவாமிகள் அவர்கள். மறுநாள் காலை விடியலில், பழகிய நண்பர்கள் எல்லோரும் வந்து பார்த்தனர். மகிழ்ந்தனர். அறை மாற்றப் பட்டது. தடைகள் நீங்கின. ஆயினும், இடையில் மகாசந்நிதானம் அவர்களுக்குரிய பணிவிடை, குட்டித் தப்பிரான்கள் செய்யவேண்டியதில்லை. ஊழியர்களே செய்யலாம் என்ற நடைமுறை வந்து விட்டது.

ஒரு நாள் வைத்தீசுவரன் கோயிலில் வைகாசி மாதத்தில் வரும் மண்டலாபிஷேகக் கிருத்திகை. மகாசந்திதானம் அவர்கள் விஜயம் செய்திருக்கிறார்கள். சித்தாமிர்த தீர்த்தத்தில் ஆசமனம் செய்துவிட்டுக் கரையேறினார்கள். பணிவிடை ஊழியன் நடராசனிடம் மகாசந்நிதானம் அவர்களின் திருவடியைத் துடைக்கப் பரிவட்டம் (துண்டு) வாங்க முயற்சி செய்தோம். அவன் துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டு, அவனே துடைத்தான். சுற்றிலும் ஏராளமான - பக்தர்கள். மக்கள்!

குருமணிக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அடக்கமுடியாத ஆதங்கம். வழிபாடெல்லாம் முடித்துக்கொண்டு கட்டளை மடத்துக்கு