பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தனியே பேசும்போது கூறுவதுண்டு. இதன் காரணமாக இன்னமும்கூட மேடைகளில் நம்முடைய சிந்தனைகளை முழுமையாகக் கூறவில்லை. "ஊரார் தத்தம் மனத்தளவே பேசுவார்கள்” என்பது, நாம் ஒதும் திருவாசகம். ஆனால், இந்த ஏற்புக் குணம் இன்னமும் உருவாகவில்லை. வாழ்க்கையில் கடைசி அத்தியாயம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது இந்தப் போக்கை ஏற்க எண்ணம். ஆதலால், சமயச் சடங்குகளுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்ற முடிவுடன் இசைவு.

திருமணத்தை நடத்தி வைக்க திருவாரூரிலிருந்து புலவர் மு. இரத்தின தேசிகர் என்பவர் அழைக்கப்பட்டார். மு. இரத்தின தேசிகர் தமிழ்த் தேசிகர் பரம்பரையைச் சேர்ந்தவர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் தேசிகர் என்ற பெயரிலும், தென் மாவட்டங்களில் ஒதுவார்' 'குருக்கள் என்ற பெயர்களிலும் சமூகங்கள் வாழ்கின்றன. இவர்கள் தமிழர் இல்லங்களில் திருமணம் முதலியன செய்து வைக்கும் புரோகிதர்களாக வாழ்ந்தனர். வாழ்ந்து கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற இனவழிப் போராட்டத்தின் விளைவாக இருக்குமா? ஆய்வுக்குரியது.

இரத்தின தேசிகரிடம் "சடங்குகளுடன் திருமணத்தை நடத்தி வையுங்கள். அதேபோழ்து சடங்குகளைக் குறைத்துக் கொள்ளவும்” என்ற ஆலோசனை கூறப்பெற்றது.

கீழக்காட்டுக்குப் பெரியார் வந்துவிட்டார். திருமண வீட்டார் போய், "திருமணத்தை எந்த முறையில் செய்வது?" என்று அவரிடம் கேட்கின்றனர். பெரியார் வழக்கம்போல் பெருந்தன்மையுடன் "மகாசந்நிதானம் விருப்பம்போல் செய்யுங்கள் எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை!" என்று கூறிவிட்டார். திருமணம் நடந்தது! திருமுறை வாழ்த்துகளுடன்! அடுத்து வாழ்த்துரை! தலைவர் பெரியார் தாம் முதலில் பேசுவதுதான் முறை என்றும், தாம் பேசிய பின் மகாசந்நிதானம் வாழ்த்துரை வழங்கி நிறைவு செய்வதுதான்