பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

271



கிறார்கள்; அது தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறது; குழந்தை அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கியதும் விளையாட்டுப் போக்கில் வீதிப்பக்கம் வருகிறது. அப்போது அது, தனக்கு மிக உவப்பானபிடித்தமான கற்கண்டு கட்டிகளையோ, வைத்து விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்களையோ யாராவது தந்து தங்கக் கிண்ணத்தைக் கேட்டால் கொடுத்து விடும். அதற்குத் தங்கக் கிண்ணத்தின் மதிப்புத் தெரியாது. பொம்மைகளைப் போட்டு உடைத்து விளையாடுவது போலத் தங்கக் கிண்ணத்தைப் போட்டு விளையாடவும் செய்யலாம். காரணம், அது அறியாக் குழந்தை.

அது போல,

இறைவன் உயிர்களுக்குக் கருணையினால் மாறிலாக் கருணையை வழங்குகின்றான். எனினும் பல உயிர்கள் அதைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்வதில்லை. இறைவன் கருணை நிறைந்தவன் என்பதை யுணர்த்தும் வண்ணம், அவன் அம்மையப்பனாகவே விளங்குகின்றான். அவன் உயிர்கள் இருக்கும் இடம்தேடி, இல்லங்கள்தோறும் எழுந்தருளித் திருவடித் தாமரைகளைக் காட்டி ஆட்கொள்ளுகின்றான். மாணிக்கவாசகப் பெருமானையும், பெருந்துறையில் பிச்சதியற்றி ஆட்கொண்டதாகவும், தான் அதன் அருமையை உணராததாகவும் மேற்கண்ட உவமையின் வாயிலாக விளக்குகின்றார். இக்கருத்தமைந்த அழகிய பாடல் இதோ:

"மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணிற்று மேனியாய்
மெய்மை யன்பருள் மெய்ம்மை மேவினார்