பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

33


களுக்கும் புதிய பெரியவர் முயற்சி செய்தார். பேரவைத் தலைவர் அவர்கள் இடம் கொடுக்காததால் வெற்றி கிடைக்கவில்லை. பேரவைக் கணக்குக்குச் சிறப்புத் தணிக்கை செய்ய ஆளுநராட்சி ஆணை பிறப்பித்தது. அதில் பழி துாற்றுவதற்கேற்றவாறு ஒன்றும் கிடைக்கவில்லை. இடையில் புதியவர் எப்படியோ சில முயற்சிகளை மேற்கொண்டு திருப்பனந்தாள் மடத்துச் சுவாமிகளிடமிருந்த பேரவைச் சாவியை அரசிடம் ஒப்படைக்கும்படியும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும்படியும் செய்துவிட்டார். மீண்டும் பேரவை, கொல்லைப்புற வாயிலாக அரசிடம் ஒப்படைக்கப் பெற்றுவிட்டது. ஆயினும் நாம் தொடர்ந்து பேரவையை மீட்க அரசுடன் போராடிக் கொண்டு வருகின்றோம்.

இடையில் புரட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் அமைந்த அரசு, பேரவைக்குப் பச்சைக் கொடி காட்டியது. பேரவை மாநிலக்குழு கூடியது. இந்த நிலையில் காஞ்சி காமகோடி பீடம் பேரவையிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் எழுதியது. நாம் பேரவைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். பேரவை மாநிலக்குழு இருக்கிறது. ஆனால் இயங்கவில்லை! நிதி இல்லாதது முதற்காரணம்: இரண்டாவது காரணம் நமக்கு ஏற்பட்ட உள்ளப் பாதிப்பு: ஆனால் இன்றோ நாளையோ பேரவை இயங்கும்! திருவருளும் தமிழ்நாடு அரசும் துணை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நெருக்கடி காலத்தில் நம்முடைய நிறுவனத்திற்கும் நமக்கும் ஏற்பட்ட நெருக்கடிகள் பல! ஏராளமான ஆய்வுகள்! திருவருள் துணையால் சோர்வின்றி நடை போட் டோம். இந்த நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட சோதனைகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. ஏற்கெனவே இருந்த பல அத்தியாயங்களை விட இந்த அத்தி யாயமே பயனுடையது என்று உண்மையாகக் கருது கின்றோம். நெருக்கடி காலத்தில்தான் "குன்றக்குடி கிராம நலச் சங்கம்” தோன்றியது. கிராம முன்னேற்ற வேலைகள்