பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


மறுமலர்சியை உண்டாக்கிவிட்டார்கள் மகாத்மா காந்தியடிகள் போராட்டத்தில் புதிய புரட்சியை உண்டாக்கினார். வினோபாபாவே பூதானத்தில் புதிய புரட்சியை உண்டாக்கினார். குன்றக்குடி அடிகள் சமயவாழ்வில் புதிய புரட்சியை உண்டாக்கிவிட்டார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கும் துறவிகளுக்குமே உரியதென்று இடைக் காலத்தில் தவறாக எண்ணப்பட்டுவந்த சமய அறிவை இளைஞர்களின் உள்ளத்தில் ஊட்டிவிட்டார்கள், சமயவெறியை ஊட்டாமல் சமயப்பற்றை இளைய உள்ளங்களில் ஏற்றினார்கள்.

அழகான பேச்சு, அறிவாழமுடைய பேச்சு, காரண காரியத் தொடர்புடைய பேச்சு, ஆணித்தரமான பேச்சு என்று அவர்களுடைய அற்புதமான சொற்பொழிவுகளை யாவரும் பாராட்டுகிறார்கள். "குடிசைக்கும் கோயிலுக்கும் உள்ள தூரத்தைக் குறைக்கவேண்டும்.” "அறிவு உப்பைப் போல் அளவாக இருக்க வேண்டும்; உணர்ச்சியை அது கெடுக்கக் கூடாது." "கலை தேசபக்தி ஆகிய தொண்டுகள் நாட்டையும் வீட்டையும் செப்பம் செய்யும். ஆனால் உள்ளத்தைத் திருத்துவதற்குச் சமயந்தான் துணைபுரிய வேண்டும். "தமிழும் தெய்வ நெறியும் வேறு வேறு அல்ல” என்பவற்றைப்போன்ற உண்மைகளைப் புதிய உருவத்தில் அவர்கள் வெளியிடும் பொழுது மக்கள் அவர்களுடைய அன்பையும் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் அருள்நெறித் திருக்கூட்டத்தை நிறுவி, இளைஞர்களையும் ஏழைகளையும் ஈடுபடுத்திய பெருமை அவர்களுக்கு உரியது.

அடிகளார் எழுதிய பதினாறு கட்டுரைகளை இப்புத்தகத்தில் காணலாம். அவர்களுடைய சொற்பொழிவு வெள்ளம் போன்றது. அவற்றிற் காணும் துளிகள் இவை. ஆனாலும் வைரம் போன்ற கருத்துக்களை வெளியிடுபவை. எல்லாக் கட்டுரைகளிலும் சமய உணர்ச்சி இழையோடுகிறது.

சமய வாழ்க்கையின் உயர்வையும், பண்டைத் தமிழர்களின் வாழ்வில் சமயம் பெற்றிருந்த சிறப்பையும்,