பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


நாட்டரசர், டாக்டர் மு. அ. முத்தைய செட்டியார் அவர் களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இந்நினைவு அறக்கட்டளையை நிறுவிய டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைத் தமிழகம் என்றும் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளது. இதனைச் செவ்விதின் அச்சிட்டு உதவிய சிதம்பரம் முகுந்தன் அச்சகத்தார்க்கும் அச்சு ஆகுங்கால் அச்சுப் பிழைகளைத் திருத்திய கா. ம. வேங்கட ராமையாவுக்கும் நன்றி. -

நா. பாலுசாமி

தமிழ்த் துறைத் தலைவர்

இந்திய மொழிப் புல முதன்மையர்

அண்ணாமலை நகர்,
22-11-81

10. சமய இலக்கியங்கள்
1981 செப்டம்பர்


அணிந்துரை


ஞானத்தமிழாகரர், டாக்டர், புலவர்
வை. இரத்தினசபாபதி பி.ஓ.எல், எம்.ஏ, பிஎச்.டி.


தத்துவத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்,


சென்னை. "சமய இலக்கியங்கள்" என்பது நூலின் தலைப்பு. "சமயம்" என்ற சொல்லின் நிலை இரண்டுங்கெட்டான் நிலை, "சமயம்" என்ற சொல்லொலியைக் கேட்டவுடன் எழும் எண்ணக் குவியல்கள் எல்லாவற்றையும் குப்பையென நீக்கவும் குறித்த பொருள் இது என உணர்த்தவும் நின்ற முதல் நூல் இது. சமயக் கணக்கர்தம் மதிவழி போகாது, உலகியல்