பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

61


தீர்த்துக் கொண்டு விடுவோம். அதற்கு வெளியாட்களின் உதவி தேவை என்னும் பட்சத்தில் உடனே டிரங்க்கால் போட்டு வரவழைத்து விடுவார் சாமி. எங்களுக்கு எப்போது தேவை என்றாலும் சாமி வருவார். அவர் எங்கே இருந்தாலும் போனில் அழைத்துப் பிரசினையைச் சொல்வோம்.

கிராமத்துக்கு வேண்டிய முன்னேற்றத்தை அடிப்படை நிலையில் அவர் அருமையாய் ஏற்படுத்தி வைத்திருந்தார். மாதர் சங்கம், சிறுவர் சங்கம், கிராம நலச் சங்கம், என கிராம முன்னேற்றத்திற்கு என்னென்ன கூட்டுறவு அமைப்புக்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் தயாராய் வைத்திருந்தார். மக்களையும் தயார்ப்படுத்தியிருந்தார். அதனால்தான் இந்த அட்வான்ஸ்டு டெக்னாலஜியை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறார்கள்.

வீரப்பன் அம்பலம்:

ங்குள்ள நேருஜி பாலித்தீன் சங்கத்தின் மூலமாக அச்சு இயந்திரம் வாங்கி, பாலித்தீன் பைகளில் அச்சடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எங்கள் ஃப்ளுரைடு ஆலையிலும் நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். இதுபோன்ற கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்றுமதி செய்வது என்பது இந்தக் குன்றக்குடியில் உள்ள சங்கத்தின் மூலமாகத்தான் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே? இதே மாதிரி ஃப்ளூரைடு வேண்டுமென்று வெளிநாடுகளில் கேட்கிறார்கள். அதற்காகவே தற்போதுள்ள கூட்டுறவுச் சங்கங்களை மேலும் மெஷின்கள் வாங்கி விரிவு படுத்தத் தீர்மானித்திருக்கிறோம்.

மேலும் இங்கு முந்திரியின் தோலைக் கொண்டு பெயிண்ட் தயாரிக்கும் ஆலை ஒன்று வைத்திருக்கிறோம். தற்போது ஐயாயிரம் லிட்டர்கள்தான் தயாரிக்கிறோம், மேற் கொண்டு பத்தாயிரம் லிட்டர்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.