பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைகள் - தொகுதி நான்கு 3 1

சோதிட நூற்களின் சிறப்பும் எங்கும் பிரகாசிக்கத்தக்க நிலையி லிருந்ததுடன் சகல பாஷைக் குடிகளும் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலும், அறிவின் விருத்தியிலு மிருந்து சுகவாழ்க்கைப் பெற்றிருந்தார்கள். இத்தேசத்தோர் யாவருக்கும் புத்த தன்ம நல்லொழுக்கங் களாம் வித்தை, புத்தியீகை, சன்மார்க்கங்கள் நிறைந்து வருங்காலத்தில் வித்தைக்கு சத்துரு விசனம் தாரித்திர மென்பதுபோல் இத்தேசத்தின் சத்தியதன்மத்திற்கே சத்துருவாக அசத்தியர்களாம் மிலைச்சர் மிலேச்சரென்னும் வோர் சாதியார் வந்து தோன்றினர்கள். அவர்கள் வந்த காலவரையோ புத்தபிரான் பரிநி ருவானத்திற்கு ஆயிரத்தி யெழுநூறு வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய பெளத்த மன்னர்களாம் சீவகன், மணி வண்ணனிவர்கள் காலமேயாகும். அவர்களுடைய சுயதேசம் புருசீக தேசமென்றும், அவர்கள் வந்து குடியேறிய விடம் சிந்துாரல் நதிக்கரை யோரமென்று அஸ்வகோஷா அவர்களெழுதியுள்ள நாராதிய புராண சங்கைத்தெளிவிலும், குமானிடர் தேசத்தில் மண்ணை துளைத்து அதனுள் வாசஞ்செய் திருந்தார்களென்று தோலா மொழிதேவ ரியற்றிய சூளாமணியிலும் வரைந்திருக்கின் ருர்கள். இவர்களது நாணமற்ற வொழுக்கத்தையும், கொறுாரச் செயலையும், மிலேச்ச குணத்தையுமுனர்ந்த சேந்தன் றிவாகரதேவர், தனது முன்கலை நூலிலும், மண்டல புருடன் றனது பின்கலை நூலினும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்று மிவர்களை யழைத்திருக்கின்ருர்கள். இத்தகையா யழைக்கப்பெற்ற மிலேச்சர்கள் செய்தொழில் யாது மின்றி இத்தேசத்தோரிடம் பிச்சையிரந்துண்பதே அவர்களது முதற்கிருத்தியமாயிருந்தது. அவ்வகை யிரந்துண் ணுங்கால் இத்தேசக் குடிகள் பல பாஷைக்காரர் களாயிருப்பினும் சத்தியத்தில் ஒற்றுமெயுற்று வாழ்தலையும், அவர்களன்பின் பெருக்கத்தையும், மகடபாஷையில் அறஹத் தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட