இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
139
புளிமா தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | பைகார்ப் பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஆக்சாலிடேசீ (Oxalidaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | அவெர்கோயா (Averrhoa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பிலிம்பி (bilimbi, Linn.) |
தாவர இயல்பு | : | சிறு மரம் 10 மீ. முதல் 15 மீட்டர் உயரமாகவும், கிளைத்துத் தழைத்தும் வளரும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | கூட்டிலை, இறகு வடிவானது. சிற்றிலைகள் 5-17 இணைகள். அடிப்புறம் நுண்மயிர் காணப்படும். 4-5 செ.மீ. 2.5-3 செ.மீ. நீள் முட்டை வடிவானது. |
மஞ்சரி | : | நுனி வளர் பூந்துணர் அடிமரத்திலும், கிளைகளின் தண்டிலும் நேரடியாக உண்டாகும். |
மலர் | : | ஒழுங்கானது, ஐந்தடுக்கானது. |
புல்லி வட்டம் | : | சிறு இலை போன்ற 5 புல்லிகள் திருகு இதழமைப்பில். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் திருகிதழமைவு, இதழ்களின் அடியில் உட்புறத்தில் செம்மை நிறத் திட்டு இருக்கும். |
வட்டத்தட்டு | : | 5 சுரப்பிகளாக உடைந்திருக்கும். |
மகரந்த வட்டம் | : | 10 மகரந்தத் தாள்கள். இவற்றில் 5 மலட்டு மகரந்தத் தாள்களாகக் குன்றியிருக்கும். |