இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
173
தாவரங்கள்
தாவரக் குடும்பம் | : | மீலியேசி (Meliaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | அசாடிராக்டா (Azadirachta) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகா (indica) |
சங்க இலக்கியப் பெயர் | : | வேம்பு |
தாவர இயல்பு | : | மரம், உயர்ந்தும், கிளைத்துப் பரவி அகன்றும், நெடு நாளைக்கு வாழும் பெருமரம். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் (Mesophyte) |
இலை | : | கூட்டிலை. 9 முதல் 15 வரையிலான சிற்றிலைகள் இறகமைப்பில் இருக்கும். |
சிற்றிலை | : | நீண்ட குத்துவாள் வடிவினது. பல் விளிம்புடையது. சற்று வளைந்துமிருக்கும். நடு நரம்பு தெளிவாகத் தோன்றும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் நீண்டு கிளைத்த கலப்புப் பூந்துணர். |
மலர் | : | சிறு மலர்களை உடையது. வெள்ளிய நிறம். மணமுள்ளது. |
புல்லி வட்டம் | : | ஐந்து பிளவானது. |
அல்லி வட்டம் | : | ஐந்து, மெல்லிய வெளிய சிறு இதழ்கள் புல்லிக்கு மேல் விரிந்து காணப்படும். |
மகரந்த வட்டம் | : | அல்லிகளை விடக் குட்டையான மகரந்தக் குழல் நீண்டிருக்கும். மேற்புறத்தில் குழல் 9-10 விளிம்புகளை உடையது. குழலுக்குள் 9-10 மகரந்தப் பைகள் ஒட்டியிருக்கும். |
சூலக வட்டம் | : | சூற்பை 3 செல்களை உடையது. சூல்தண்டு மெல்லியது, நீளமானது. |
சூல் முடி | : | குறுகிய தண்டு போன்றது. மூன்று பிளவானது. ஒவ்வொரு சூலக அறையிலும் 2 சூல்கள். |