இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
255
தாவர இயல்பு | : | மரம். தழைத்துக் கிளைத்துப் பரவி உயர்ந்து வளரும். |
தாவர வளரியல்பு | : | 2000 அடி உயரமான மலைப் பாங்கிலும் வளர்வது. மீசோபைட். |
இலை | : | 6-12 சிற்றிலை கொண்ட கூட்டிலை. |
சிற்றிலை | : | பசியது. குத்துவாள் வடிவினது 7-18 செ.மீ. நீளமானது. தோல் போல் தடித்திருக்கும். |
தளிர் | : | மிக அழகிய செந்நிறமான தளிர்கள். கூம்பு போன்ற இலைச் செதில்கள் உள. |
மஞ்சரி | : | பகட்டானது. காரிம் என்ற நுனி வளராப் பூந்துணர். |
மலர் | : | அழல் நிறச் செம்மையானது. கிளையெல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். மலர்ச் செதில்கள் விரைவில் உதிர்வன. சிவந்த மலரடிச் சிறு செதில்கள் சிறிது காலம் ஒட்டியிருக்கும். |
புல்லி வட்டம் | : | அல்லியைப் போன்று சிவந்த 4 இதழ்கள். அடியில் இணைந்த நீண்ட குழல் வடிவாக இருக்கும். குழலுக்குள் பிளவு பட்ட வட்டத் தட்டுள்ளது. மேலே இதழ்கள் சற்று நீண்டு அடியிதழ் தழுவியிருக்கும். |
அல்லி வட்டம் | : | அல்லியிதழ்கள் இல்லை. |
மகரந்த வட்டம் | : | 7 மென்மையான தாதிழைகள் நீளமானவை. தாதுப் பைகள் சுழலும் அமைப்புடையன. நீள வாக்கில் பிளவுபட்டுத் தாது வெளியாகும். |
சூலக வட்டம் | : | வட்டத் தண்டில் ஒட்டியது. பல சூல்கள். சூல் தண்டு நீண்ட இழை போன்றது. சூல்முடி சிறிய குல்லாய் போன்றது. |
கனி | : | வெடியாக் கனி. தட்டையானது. தோல் போல் தடித்த வலிய உறையுடையது. |