இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
297
மஞ்சரி | : | இணர்க் காம்பு மெல்லியது. நுனியில் 2 அங்குல நீளமும், 2.5 அங்குல அகலமும் உள்ள கொத்தாக இருக்கும். |
மலர் | : | வெண்ணிறமான சிறு மலர்கள். |
புல்லி வட்டம் | : | புனல் வடிவானது; குட்டையானது; பிளவுள்ளது. |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் இணைந்தது போலக் காணப்படும். மடல் விரிந்திருக்கும். |
மகரந்த வட்டம் | : | அளவற்ற தாதிழைகள் |
சூலக வட்டம் | : | 2 முதல் பல சூல்கள். சூல்தண்டு மிக மெல்லிய இழையானது. |
கனி | : | ‘பாட்’ (‘Pod’)எனப்படும் உலர்கனி; உருண்டையானது. |
இதன் மரம் அடியில் வெளிர் மஞ்சளானது; வலியது; கனமானது; உழவியல் கருவிகட்குக் காம்பு போடப் பயன்படும்.