இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
401
தாவரக் குடும்பம் | : | எபனேசி (Ebenaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | டையோஸ்பைரஸ் (Diospyros) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | எபெனம் (ebenum) |
தாவர இயல்பு | : | பெரிய, உயரமான மரம். பசிய காடுகளில் வளர்கிறது. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட். பசிய இலையுள்ளது. வறண்ட நிலத்தில் வளரும், |
இலை | : | தனி இலை, சுற்றடுக்கில் வளரும். |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர் முதிய கிளை நுனியில் காணப்படும். |
மலர் | : | பசிய மஞ்சள் நிறமான மலர்கள். இரு பாலானவை. பெண் பூக்கள், ஆண் பூக்களைக் காட்டிலும் பெரியவை. 4-5 அடுக்கு மலர்கள். |
புல்லி வட்டம் | : | சிறியது. பிளவுபட்டது. |
அல்லி வட்டம் | : | 4-5 இதழ்கள், புனல் வடிவானவை. முதிராப் போதுகளில் இதழ்கள் வலமாக முறுக்கியிருக்கும். |
மகரந்த வட்டம் | : | ஆண்மலரில் 4 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லது 16 வரையிலும் காணப்படும். |
தாதுப்பை | : | நீளமானது. குத்துவாள் போன்றது. |
சூலக வட்டம் | : | பெண் பூக்களில் 4-5 சூலிலைகளை உடையது. பெரும்பாலும் ஒரே ஒரு சூல் காணப்படுகிறது. |
சூல் தண்டு | : | சூல்தண்டும், சூல்முடியும் 1-4 பிளவுள்ளவை. ஆண் பூவில் அருகியுள்ளது. |
கனி | : | உருண்டை அல்லது முட்டை வடிவானது. பெரிதும் புல்லி முதிர்ந்து, மரம் போல் சூழ்ந்திருக்கும். உள்ளே சதைப் பற்று குழகுழப்பானது. |
73-26