இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
425
சங்க இலக்கியப் பெயர் | : | செம்மல் |
உலக வழக்குப் பெயர் | : | சாதி முல்லை, சாதிப்பூ |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் |
தாவர இயல்பு | : | பல்லாண்டு வளரும் புதர்க் கொடி |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
உயரம் அல்லது நீளம் | : | 20 முதல் 40 அடி நீளம் வரை நன்கு கிளைத்துப் படரும் ஏறுகொடி |
வேர்த் தொகுதி | : | ஆணிவேரும் பக்க வேர்களும் |
தண்டுத் தொகுதி | : | மெல்லிய கம்பி போன்றது. வன்தண்டு அமைப்புடைமையின் வலிமையானது |
கிளைத்தல் | : | இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைக்கொடியாக வளரும். |
இலை | : | கூட்டிலைகள்: எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள், இறகு வடிவில் உள்ளன. |
சிற்றிலை அடியில் உள்ளவை | : | நீளம் 10-12 மி. மீட்டர். அகலம் 6-8 மி. மீட்டர். |
இலை நுனியில் உள்ள சிற்றிலை | : | நீளம் 20-25 மி. மீட்டர் அகலம் 10-12 மி. மீட்டர் வடிவம் நீள் முட்டை |
மஞ்சரி | : | நுனிக்கிளைகளில் உள்ள இலைக் கோணத்தில் பூவடிச் செதிலின், கோணத்தில் தனி மலர் செதில் இலை போன்றது. பூவடிச் செதில் முட்டை வடிவானது. 5-8 மி.மீ. நீளமானது. |
மலர் | : | வெண்மையானது. நறுமணமுள்ளது 5 மடல்கள். |
புல்லி வட்டம் | : | பசுமையானது. 5 புல்லிகள் அடியில் இணைந்து குழல் வடிவாகவும், 8-10 மி. மீட்டர் நீளமாகவும் இருக்கும். நுனியில் 5 பிரிந்த இழை போன்ற புல்லிகள் 5-9 மி.மீட்டர் நீளமானவை. |
அல்லி வட்டம் | : | வெண்மையான 5 இதழ்கள் அடியில் குழல் வடிவாக இணைந்து 20-25 மி.மீ |