இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
514
மலர் | : | குமிழ் போன்றது |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் பசிய நிறத்தன. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து, 5 பட்டையாகி நீண்டு, நுனி மொட்டையாக இருக்கும். உட்கூடுள்ள இதற்குக் ‘கரோனா’ என்று பெயர். இதற்குள் சூல்தண்டு நீண்டிருக்கும். இதன் செதில்கள் சதைப் பற்றாக 5 மகரந்தப் பொறிகளை நுனியில் உள் அடக்கிக் கொண்டிருக்கும். இப்பொறிகளைப் பொலினியம் (Polinium) என்று கூறுவர். |
மகரந்த வட்டம் | : | கரோனாவில் நுனி 5 கோணமான சூல்முடிச் செதில்களால் மூடியிருக்கும், கரோனாவின் 5 பட்டைகளின் மேலே ‘பொலினியம்’ என்ற தாதுக்களைக் கொண்ட 5 பொறிகள் இருக்கும். |
தாது | : | பட்டையான அகன்ற தாதுப்பைகளில் விளையும். இப்பைகளை இழை ஒன்று இணைக்கும். இதற்குப் ‘பொலினியம்’ (பொறி) என்று பெயர். |
சூலக வட்டம் | : | 2 செல் உடைய சூலறைச் சூலகம். சூல்தண்டு மெல்லியது. சூல்முடி 5 கோணமான மெல்லிய செதிலால் ஆனது. (இதன் 5 கோணத்திலும் 5.பொலினியம் புதைந்திருக்கும்). |
கனி | : | இரண்டு அகன்ற பெரிய சதைப்பற்றான தடித்த ‘பாலிக்கிள்’ எனப்படும். |
விதை | : | முட்டை வடிவானது; பட்டையானது; மெல்லியது. நுனியில் பல நீண்ட வெண்மை நிறமான நுண் மயிர் இழைகள் அடர்ந்திருக்கும். கனி வெடித்து விதைகள் சிதறுங்கால், இம்மயிர் இழைகள் விரிந்து, விதைகளைக் காற்றில் மிதக்கச் செய்து, வேறிடம் சேர்க்கும். |