இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
613
மஞ்சரி | : | :நுனிவளராப் பூந்துணர் அம்பெல் எனப்படும். மலர்க் காம்பு இல்லை. |
மலர் | : | வெண்மையானது. |
புல்லி, அல்லி வட்டங்கள் | : | புல்லியும், அல்லியும் இணைந்து ‘பீரியாந்த்’ எனப்படும். புல்லி புனல் வடிவானது. 5 அகன்ற, பரந்த பிரிவுள்ளது. |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள். தாதுப் பைகள் சற்று நீளமானவை. இணைப்பு அகன்று இருக்கும். |
சூலக வட்டம் | : | மலர்க் காம்பில் ஒட்டியிருக்கும். இரு சூலகம். சூல்தண்டு பெரியது. |
கனி | : | காப்சூல் எனப்படும் வெடிகனி. வலிய வெளிப்புறம் தோல் போன்றிருக்கும். விதைகளைச் ‘சீட்ஸ் ஆப் கைரினாப்ஸ்’ என்பர். |
இம்மரம் கிழக்காசியா, மலேயா, சீனா, மலாக்கா முதலியவிடங்களில் காணப்படுகிறது என்பர்.